வாழைச்சேனை இளம் தாய் ஓமானில் மரணம்



எச்.எம்.எம்.பர்ஸான்-
ட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய இளம் தாயொருவர் ஓமான் நாட்டில் மரணமடைந்துள்ளார்.

ஒரு பெண் பிள்ளையின் தாயான இவர், நான்கு மாதங்களுக்கு முன்னர் தொழில் நிமித்தம் காரணமாக ஓமான் நாட்டிற்கு சென்றுள்ளார்.

இவ்வாறு அங்கு சென்ற அந்த பெண்ணுக்கு திடீரென ஏற்பட்ட நோய் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணித்துள்ளதாக ஓமான் நாட்டிலிருந்து தமக்கு தகவல் கிடைத்ததாக மரணமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

குறித்த பெண்மணி மூன்று நாட்களுக்கு முன்னர் மரணித்த நிலையில், குடும்பத்தாருக்கு நேற்று (13) ஆம் திகதி தகவல் கிடைத்ததாக குடும்பத்தார் மேலும் தெரிவித்தனர்.

அங்கு மரணமடைந்த பெண்ணின் உடலை அந்நாட்டிலே நல்லடக்கம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :