நாவிதன்வெளி அன்னமலை தேசிய கல்லூரியில்
தரம் 01 மாணவர்களிற்கான வரவேற்பு விழா நேற்று நடைபெற்றது .
இந்நிகழ்வில் பாடசாலையின் EPSI இணைப்பாளரும் சம்மாந்துறை வலய உதவிக்கல்விப் பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா பிரதம அதிதியாக கலந்து தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றி சிறப்பித்தார்.
பாடசாலையின் பழைய மாணவரும் நாவிதன்வெளி பிரதேசசபையின் உறுப்பினருமான தி.யோகநாயகன் நாவிதன்வெளி இலங்கைவங்கி முகாமையாளர் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வு பாடசாலை அதிபர் .சீ.பாலசிங்கன் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கான முதலாந்தர மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நினைவுச்சின்னம் கற்றல் உபகரணமடங்கிய பக்கற்; அடையாள அட்டை; cup; மாலை போன்ற சகல பொருட்களையும் வழங்கிய நாவிதன்வெளியை பிறப்பிடமாகக் கொண்ட பாடசாலையின் முன்னைநாள் அதிபர் இலட்சுமணர் இராஜசிங்கம் அவர்களது வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகள் இதற்கான நிதிப்பங்களிப்பினை வழங்கினர்.
முதலாந்தர ஆசிரியை திருமதி.வி.பிரதீபன் ஆசிரியருக்கும் முதலாந்தரத்தில் இணைந்து கொண்ட மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டன.
0 comments :
Post a Comment