ஹஸன் மௌலவி அவர்களின் நற்பனி மன்றத்தின் பணிப்பாளர் ஸாதிக் ஹஸன் அவர்களிடம் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர்
MS.சுபைர் அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க உலமாக்களுக்கான வாழ்வாதார உலர் உணவுப் பொதிகள் 120 குடும்பங்களுக்கு ஒரு பொதி 4000. ரூபா பெறுமதியான பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று காலை அல்ஹாபிழ் கபீர் இஹ்ஸானி அவர்களின் தலைமையில் முஹம்மதிய்யா அரபுக் கலாசாலையில் கதமுல்குர்ஆன்வைபவத்துடன் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் சுகாதார அமைச்சர் MS. சுபைர் அவர்கள் Azizah_Foundation பணிப்பாளரும் ஹஸன் மௌலவி அவர்களின் மகனுமான ஸாதிக்_ஹஸன் அவர்களும் ஏறாவூர் நகர சபையின் கௌரவ உறுப்பினர் M.S.A.கபூர்தீன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் S.M.M.அறூஸ் மற்றும் மூத்த உலமாக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment