அக்கரைப்பற்று சம்பியன்ஸ் லீக் : லெஜண்ட்ஸ் அணியினரை வீழ்த்தி சம்பியனானது அக்கரைப்பற்று ஹிஜ்ரா அணி!!



நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்-
கிழக்கின் கேடயம் அனுசரணையில் பல மாதங்களாக நடைபெற்றுவந்த 20 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அணிக்கு 11 பேர் கொண்ட அக்கரைப்பற்று சம்பியன்ஸ் லீக் கடின பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் இன்று (20) அக்கரைப்பற்று பொதுவிளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

அக்கறைப்பற்றை சேர்ந்த 06 விளையாட்டுக் கழகங்கள் பங்கேற்ற இந்த சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி அக்கரைப்பற்று லெஜண்ட்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் அக்கரைப்பற்று ஹிஜ்ரா விளையாட்டுக் கழகத்திற்கும் இடையில் இடம்பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அக்கரைப்பற்று லெஜண்ட்ஸ் விளையாட்டு கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் முடிவில் 09 விக்கட்டுக்களை இழந்து 118 ஓட்டங்களை பெற்றது. இதில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய துடுப்பாட்ட வீரர் முஹம்மத் றிஸாம் 59 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பதிலுக்கு 119 ஓட்டங்களை இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய அக்கரைப்பற்று லெஜண்ட்ஸ் விளையாட்டு கழகம் ஆரம்பம் முதல் அதிரடியாக துடுப்புபெடுத்தாடிவந்த நிலையில் பின்னணி துடுப்பாட்ட வீரர்கள் சுழல்பந்துகளுக்கு முகங்கொடுக்க முடியாமல் திணறி அடுத்தடுத்து விக்கட்டுக்களை இழந்தனர். இருந்தாலும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் அதிரடியாட்டம் காரணமாக 16.2 ஓவர்கள் முடிவில் 08 விக்கட்டுக்களை இழந்து 02 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் ஹிஜ்ரா அணி சம்பியனானது. இத்தொடரின் தொடராட்டக்காரர் விருதை 78 ஓட்டங்களையும், 14 விக்கட்டுக்களையும் வீழ்த்திய றோயல் அணி வீரர் அஸார் தனதாக்கி கொண்டார். இறுதியாட்ட நாயகனாக 40 பந்துகளுக்கு 56 ஓட்டங்களை பெற்ற அக்கரைப்பற்று ஹிஜ்ரா அணி வீரர் றிசாட் தனதாக்கினார்.

பரிசளிப்பு நிகழ்விற்கு கிழக்கின் கேடயம் அமைப்பின் தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல் சம்மேளன தலைவர் எஸ்.எம். சபீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றிக்கேடயங்களை வழங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் ஐ.டீ கியூ.லேப் (IT Q LAB) தவிசாளர் ஸபூர் ஆதம், இறக்காமம் பிரதேச செயலக சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகிர், கிளக்கின் கேடயம் பொதுச்செயலாளர் யூ.எல்.என். ஹுதா, சிரேஷ்ட ஊடகவியலாளர் அதிபர் றியாஸ் இஸ்மாயில் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :