கல்முனை இஸ்லாமிய சமூக சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களின் ஒன்று கூடல் நிகழ்வு



அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை இஸ்லாமிய சமூக சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களின் ஒன்று கூடல் நிகழ்வு அண்மையில் கல்முனை கடற்கரைப் பள்ளி வீதி இக்பால் ஹோட்டலில் இடம்பெற்றது.

சங்கத்தின் தலைவர் எம்.ஐ.பதுர்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கடந்த கொரோனா தொற்றுகளிருந்த காலத்தில், சிறப்பாக முன்னெடுக்கப்பட்ட சமூகப் பணிகள் நினைவுரப்பட்டதுடன்
குறிப்பாக, சிரமதானங்கள் பலவற்றில் ஈடுபட்டிருந்த சங்க உறுப்பினர்கள் வெகுவாகப் பாராட்டப்பட்டனர்.

புதிய ஆண்டிற்கான சங்க அடையாள அட்டைகள்,கலண்டர்கள், வழங்கி வைக்கப்பட்டதுடன்,கல்வி அபிவிருத்தி தொடர்பில் வசதிகள்,
வாய்ப்புகழற்றிருக்கும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டுகளைப்போல இனிவரும் காலங்களிலும் மேற்கொள்வதற்கான முயற்சிகள் பற்றியும்.
கலந்துரையாடி முடிவுகள் எடுக்கப்பட்டன.

விலைவாசி ஏற்றம் காரணமாக பலவிதமான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கும் குடும்பங்களுக்கான மனிதாபிமான உதவிகள்.
உயர்கல்வியை, பல்கலைக்கழக கல்வியை தொடர்வதில் வசதியின்மையால் சிரமப்படுகின்ற மாணவர்களுக்கான உதவிக்கரம்.

எதிர்வரும் புனித ரமழான் மாதத்தில் வழமைபோல் இம்முறையும் வழங்கவுள்ள, எமது சங்கத்தின் சமூகரீதியான செயற்பாடுகள்...
"இப்தார் நிகழ்வுகள்" என பலதரப்பட்ட விடயதானங்கள் பற்றியும் பேசப்பட்டு முடிவுகள் எட்டப்பட்டன .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :