2021 ஆம் ஆண்டில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 32 மாணவர்கள் வெட்டுப் புள்ளியை தாண்டி எண்ணிக்கை அடிப்படையில் ஓட்டமாவடி கோட்டத்தில் முதலாம் இடத்தினையும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் இரண்டாம் இடத்தினையும் ஓட்டமாவடி சரீப் அலி வித்தியாலயம் பெற்று சாதனை படைத்துள்ளதாக பாடசாலையின் அதிபர் ஏ.சீ.எம்.அஜ்மீர் தெரிவித்தார்.
அந்த வகையில் ஓட்டமாவடி சரீப் அலி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் செல்வி.அபுதாகிர் பாத்திமா ரயா என்ற மாணவி 187 புள்ளிகளைப் பெற்று கோட்ட மட்டத்தில் அதிகூடிய முதன்மைப் புள்ளி என்ற முதலாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்
மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப்பெற்று சாதனை படைக்க மாணவர்களைத் தயார்படுத்திய ஏ.எஸ்.ஜௌபர், ஏ.எம்.எம்.பாயிஸ், ஏ.பி.பர்ஸானா ஆகிய ஆசிரியர்களுக்கும் ஆர்வத்துடன் கல்வி கற்ற மாணவர்களுக்கும் சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோருக்கும், பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களுக்கும் சகல வழிகளிலும் ஆலோசனை, வழிகாட்டல்களையும் வழங்கிய வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா, கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர் ஆகியோருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பாடசாலை அதிபர் ஏ.சீ.எம்.அஜ்மீர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை மட்டக்களப்பு மத்தி வலயம் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளதுடன், 459 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை பெற்றமை இவ்வலயத்தின் சிறப்பம்சமாகும்.
0 comments :
Post a Comment