ஐந்தாம் புலமைப் பரிசில் பரீட்சையில் வாழைச்சேனை ஹைறாத் வித்தியாலயத்தினை சேர்ந்த மாணவன் முர்ஷித் அனாம் தஹிய் பாடசாலையில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் வாழைச்சேனை ஹைறாத் வித்தியாலயத்தினை சேர்ந்த மாணவன் முர்ஷித் அனாம் தஹிய் 177 புள்ளிகளை பெற்று பாடசாலை மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.
வாழைச்சேனை05 ஹைறாத் வீதியைச் சேர்ந்த கல்குடா பிராந்திய ஊடகவியலாளர் எஸ்.எம்.எம்.முர்ஷித்தின்; புதல்வனான அனாம் தஹிய் என்ற மாணவன் 177 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கும், பாடசாலை சமூகத்திற்கும் பெருமையை சேர்த்துள்ளார்.
வாழைச்சேனை ஹைறாத் வித்தியாலயத்தில் பரீட்சைக்கு தோற்றிய 36 மாணவர்களில் 05 பேர் சித்தியடைந்துள்ளதுடன் முர்ஷித் அனாம் தஹிய் பாடசாலையில் அதிக புள்ளிகளை பெற்ற மாணவனாவார்.
0 comments :
Post a Comment