உலக காசநோய் தின விழிப்புணர்வு ஊர்வலம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
லக காசநோய் தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் காசநோய் தடுப்பு சுகாதாரப் பிரிவு அதன் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.திலிப் மபாஸ் தலைமையில் ஒழுங்கு செய்திருந்த காசநோய் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று காலை ( 24 ) பணிமனையின் முன்றலில் இருந்து ஆரம்பித்து கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலை முன்றல் வரை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் , பிரதி பணிப்பாளர் ,டாக்டர் எம்.பி.ஏ.வாஹிட் , தொற்றாநோய் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஐ.எம்.எஸ். இர்ஸாத் , சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஸனூஸ் காரியப்பர் , பிரதேச வைத்தியர்கள் , தாதி உத்தியோஸ்தர்கள் , பொதுச் சுகாதார பரிசோதகர்கள் , அலுவலக உத்தியோஸ்தர்கள் , பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :