பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ டியன்சின் தோட்ட தொழிலாளர்கள் இரண்டாவது நளாகவும் தொழிலுக்கு செல்லாது ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர் .
இந்த ஆர்ப்பாட்டம் 02.02.2022. புதன்கிழமை அட்டன்
பொகவந்தலாவ பிரதான வீதியின் டியன்சின் சந்தியில் சங்கு ஊதி
ஒப்பாரி பாடல் பாடி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
டியன்சின் தோட்ட தொழிலாளர்களுக்கு பச்சை தேயிலை கொழுந்தினை நிறுவை செய்வதற்கு தோட்ட நிர்வாகம் டிஜிட்டல் தராசினை பயன்படுத்தும் மாறு தொழிலாளர்களை வற்புறுத்தி வருவதாகவும். டிஜிட்டல் தராசினை பயன்படுத்தி தேயிலை கொழுந்தினை நிறுவை செய்ய முடியாது எனவும் பழைய முறையிலான தராசினை தோட்ட நிர்வாகம் பயன்படுத்த வேண்டுமென தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் 01.02.2022.செவ்வாய்கிழமை பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியோடு கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றபோது தொழிலாளர்களை தகாதவார்தைகளை கொண்டு பேசிய மையினால் தோட்ட
முகாமையாளர் மற்றும் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோர் எம்மிடம் மண்ணிப்பு கோர வேண்டும் அல்லது எமது தோட்டத்தை விட்டு தோட்ட முகாமையாளர் வெளியேர வேண்டும் என வழியுறுத்தியே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது டியன்சின் தோட்டம் தொழிலாளர்களின் உரிமை கோரல். டிஜிட்டல் தராசு வேண்டாம்.தோட்ட தொழிலாளர்களை இழிவாக பேசாதே . எங்களின் வருமானத்தை குறைத்து இலாபத்தை ஈட்டும் நிறுவனம் எமக்கு வேண்டாம். தொழிலாளர்களின் பிரச்சினைக்கு முன்வராத முகாமையாளர் எங்களுக்கு வேண்டாம். போன்ற பதாதைகளை ஏந்தியவாறு தொழிலாளர்ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்
0 comments :
Post a Comment