அதிபர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி கல்முனை மாகாண மேல் நீதிமன்றத்தில் வழக்கு



சம்மாந்துறை ஜமாலியா வித்தியாலயத்தின் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய கட்டிட நிர்மாண வேலையில் அதிபரால் ஊழல் மேற்கொள்ளப்பட்டது என்று முன்வைத்து கல்முனை மாகாண மேல் நீதிமன்றத்தில் எழுத்தாணை உத்தரவுகள் கோரும் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
பாடசாலை அபிவிருத்தி குழுவின் செயலாளர் எம். ஐ. எம். றிஸ்விகான் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நால்வர் சட்டத்தரணி ஆவன்னா பாருக் மூலமாக இவ்வழக்கை தாக்கல் செய்து உள்ளார்கள்.

இதில் பாடசாலையின் அதிபர் எம். எம். மஹிஷா பானு, சம்மாந்துறை வலய கல்வி பணிப்பாளர் எம். எஸ். சஹுதுல் நஜீம், கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர், இலங்கை மனித உரிமை ஆணை குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டு உள்ளனர்.
பாடசாலையின் அபிவிருத்தி குழுவால் செய்யப்பட வேண்டிய வேலையை இப்பாடசாலையின் அதிபர் வேறு ஒரு பாடசாலையின் அதிபருக்கு கொந்துராத்து கொடுத்து இருந்தார் என்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவே வேலையை செய்ததாக பொய்யான மோசடியான அறிக்கைகளை தயார் செய்து உள்ளார் என்றும் மனுதாரர்களால் நீதிமன்றத்தின் மேலான கவனத்துக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக வலய கல்வி பணிப்பாளர், மாகாண கல்வி பணிப்பாளர் ஆகியோருக்கு பல முறைப்பாடுகளை மனுதாரர்கள் மேற்கொண்டு உள்ளபோதிலும் அதிபர் மீது உரிய நடவடிக்கைகளை இரு பிரதிவாதிகளும் எடுக்கவில்லை என்று சுட்டி காட்டி உள்ளார்கள்.

அதிபரை இடம் மாற்றுவதற்கு வலய கல்வி பணிப்பாளர், மாகாண கல்வி பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டாய உத்தரவு பிறப்பிப்பதுடன் அதிபர் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறிய வலய கல்வி பணிப்பாளர் மீது உரிய சட்ட, நிர்வாக நடவடிக்கைகளை எடுக்குமாறு மாகாண கல்வி பணிப்பாளருக்கு கட்டாய உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் முக்கியமாக கோரப்பட்டு உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :