உலமாக்கள் மற்றும் ஹாபிழ்களுக்கான கிரிக்கட் சுற்றுத் தொடரில் நிந்தவூர் காஷிபி விளையாட்டுக்கழகம் சாம்பியனானது !



நூருல் ஹுதா உமர்-
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த உலமாக்கள் மற்றும் ஹாபிழ்களை மாத்திரம் மையப்படுத்திய அணிகளுக்கிடையிலான சுற்றுத்தொடர் பொலனறுவை வெலிகந்த பிரதேசத்தில் ரியல் ஸ்டார் உலமாக்கள் அணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 9 அணிகள் இச் சுற்றுத் தொடரில் பங்குபற்றிய இத்தொடரில் இறுதிப் போட்டிக்கு நிந்தவூர் காஷிபி விளையாட்டுக்கழகம் மற்றும் அக்கரைப்பற்று ஹபீபியா விளையாட்டுக்கழகம் ஆகியன தெரிவாகி இறுதியில் காஷிபி விளையாட்டு கழகம் சம்பியன் பட்டத்தை சுவீகரித்ததுடன் இரண்டாம் இடத்தை அக்கரைப்பற்று ஹபீபியா விளையாட்டுக்கழகம் பெற்றது.

இதன் ஆட்டநாயகனாக அல்ஹாபிழ் ரிப்தாஸ் அவர்களும், தொடர் ஆட்டநாயகனாக மௌலவி அஸாம் காஷிபி அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். உலமாக்கள் பல்வேறு துறைகளிலும் கால் ஊன்றுவதற்கான செயற்பாடுகளாக இச்சுற்று தொடர் ஒழுங்கமைக்கப்பட்டு, கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :