பதுளை புத்தகக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு



'பிறபுத்த' கலாச்சார அறக்கட்டளை மற்றும் பதுளை மாநகர சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்யும் வருடாந்த 'பதுலு புத்தக வசந்தம்' பதுளை புத்தகக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு நேற்று பதுளை சேனநாயக்க பூங்காவில் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையியல் இடம்பெற்றது.

குறித்த புத்தகக் கண்காட்சி நேற்று (24) முதல் 30 ஆம் திகதி வரை தினமும் காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பதுளை சேனநாயக்க பூங்காவில் நடைபெறும் என ஏற்பாட்டளாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னணி புத்தக வெளியீட்டாளர்களின் பங்கேற்றளுடன் நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிலான புத்தகங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதேவேளை புத்தகங்களை கொள்வனவு செய்பவர்களுக்கு 20% விசேட தள்ளுபடிகள் வழங்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

நேற்றைய ஆரம்ப நிகழ்வில் பதுளை நகர மேயர் டபிள்யூ.டி. பிரியந்த அமரசிறி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :