சாய்ந்தமருது-
தெ.கி.பல்கலைக்கழக விரிவுரையாளர் விவகாரம் பற்றி உள்ளூர் ஊடகங்களில் மட்டுமல்லாது சர்வதேச ஊடகங்களிலும் செய்தி வெளிவந்துவிட்டது. இதனால் குற்றவாளியைவிட அவர் பணிபுரிகின்ற தென்கிழக்கு பல்கலைக்கழகமே பலத்த அவமானத்தை எதிர்கொண்டுள்ளது.
இவ்வாறு பரவலாக ஊடகங்களில் செய்தி வெளிவந்ததன் காரணமாக குறித்த விரிவுரையாளர் பலயீனமான மனோநிலையை கொண்டவராக இருந்திருந்தால், அவமானம் தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்வதற்கும் வாய்புக்கள் அதிகமாக இருந்தது.
குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க முற்படாமல் முண்டியடித்துக்கொண்டு ஊடகங்களில் செய்திகளை வெளியிடுவதானால் தூரநோக்கற்ற ஊடகங்களினதும், ஊடகவியலாளர்களினதும் வெறி தீர்ந்ததே தவிர, வேறு எதனை சாதிக்க முடிந்தது ?
இந்த விவகாரம் ஊடகங்களில் வெளிவருவதற்கு முன்பாகவே தென்கிழக்கு பல்கலைக்கழக நிருவாகம் குறிப்பிட்ட குற்றவாளியை அதிரடியாக பதவியிலிருந்து நீக்கியதுடன், பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்மூலம் பல்கலைக்கழக நிருவாகம் தராதரம் பாராமல் தனது கடமையை விரைவாகவும், நேர்மையாகவும் செய்துள்ளது.
எவராக இருந்தாலும் குற்றம் செய்திருந்தால் அந்த குற்றவாளிக்கு தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் ஏனையவர்களுக்கும் அது படிப்பினையாக அமையும்.
தண்டனை என்னும்போது பாதிக்கப்பட்ட மாணவி பொலிசில் முறைப்பாடு செய்திருந்தால் குற்றவாளியை பொலிசார் உடனடியாக கைது செய்திருப்பார்கள். ஆனால் அவ்வாறு பொலிசில் எந்தவித முறைப்பாடுகளும் செய்யப்படாமல் சமூக வலைத்தளங்களில் ஆதாரங்களை சமர்ப்பித்து நியாயம் கோர முற்படுவதானது குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கும் நோக்கம் அல்ல, மாறாக குற்றவாளியையும், அவர் சார்ந்த கல்வி நிறுவனத்தையும் மாணபங்கப்படுத்தும் நோக்கம் மட்டுமே உள்ளது என்பது புரிகிறது.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். ஆனால் மாணவியோ நளினம் காட்டாமலும், விரிவுரையாளரின் பிரத்தியேக அறைக்கு தனியாக செல்லாமலும், வரையறையுடனும் இருந்திருந்தால், அங்கே தூண்டல் ஏற்பட்டிருக்காது. தூண்டல் ஏற்படாதிருந்திருந்தால் இவ்வளவு பெரிய ஊடக ஆரவாரமும் உருவாகியிருக்காது.
இவ்வாறான ஊடக பிரச்சாரத்தினால் இதுவரையில் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய ஏனைய மாணவிகள் மீதும் சந்தேகங்கள் ஏற்படுவதற்கு சாத்தியம் உளளதுடன், எதிர்காலங்களில் மாணவிகளை அங்கே அனுப்புவதற்கு பெற்றார்கள் தயங்கும் சூழ்நிலையும் உருவாக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது குறிப்பிட்ட ஒரு சிலர் குற்றம் செய்தார்கள் என்பதற்காக தெ.கி.பல்கலைக்கழகத்தில் பணிபுரிகின்ற அனைத்து விரிவுரையாளர்களையும் சந்தேகக்கண்கொண்டு பார்க்கும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒழுக்கமுள்ள பலருக்கு அசௌகரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
எனவே ஒரு விரிவுரையாளர் செய்த குற்றத்தினை பக்குவமில்லாத ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு செய்திகளை வெளியிட்டதன் காரணமாக குறித்த விரிவுரையாளரை விட பல்கலைக்கழக சமூகவே முழுமையாக பாதிக்கப்பட்டு சர்வதேச ரீதியில் தலைகுணிவை எதிர்கொண்டுள்ளது.

0 comments :
Post a Comment