ரஹ்மத் பவுண்டேசனின் ஒருங்கிணைப்பில் வை . டப்ளியு .எம். ஏ. (YWMA ) அமைப்பின் பூரண அணுசரணையுடன்,வாழ்வாதார உதவிகள் மற்றும் 2022 ஆண்டிற்கான பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவரும், கல்முனை மாநகரசபை பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் தலைமையில் கல்முனை அல் - மிஸ்பாஹ் மகா வித்தியாலய மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது .
வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக தெரிவு செய்யப்பட்ட கணவனை இழந்த பெண்களுக்கு உதவி பொருட்கள் ,மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் , பல்கலைகழகத்தில் கல்வியை தொடரும் மாணவி ஒருவருக்கு புலமை பரிசில் , கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய விஷேட கல்வி பிரிவுக்கு உதவிதொகை என்பன இந்நிகழ்வின் போதுவழங்கி வைக்கப் பட்டன. .
இந்நிகழ்வில் ரஹ்மத் பவுண்டேசனின் அமைப்பினால் வை.டபிள்யு.எம்.ஏ.அமைப்பின் தலைவி தேசமான்ய பவாசா தாஹா அவர்களுக்கு ரஹ்மத் பவுன்டேசனினால் வருடா வருடம் வழங்கப்படும் சிறந்த சேவை மற்றும் சிறப்பான தலைமைத்துவ விருதினை இவ்வருடம் இவருக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் மேலும் கனடா-இலங்கைக்கான முஸ்லிம்பெண்கள் அமைப்பின் தலைவி பைரூசா காசிம் அவர்களுக்கும் ரஹ்மத் பவுண்டேசனினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கிகெளரவிக்கப்பட்டது.
.இந்நிகழ்வில் வை.டபிள்யு.எம்.ஏ. அமைப்பின் தலைவி தேசமான்ய பவாசா தாஹா , அமைப்பின் அங்கத்தவர்கள் , கனடா-இலங்கைக்கான முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவி பைரூசா காசிம் , கல்முனை அல் -மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் அதிபர் எம். ஐ. அப்துல் ரஸாக்,கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான ஏ. ஆர். செலஸ்தினா , விமாலாதித்தன் நந்தினி , விநாகமூர்த்தி புவேனேஸ்வரி , சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ். எம். நிலுபா , ரஹ்மத்பவுண்டேசன் அமைப்பின் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்கள் ,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
0 comments :
Post a Comment