டிக்கோயா - சலங்கந்த பகுதியில் பஸ் விபத்து 16 பேர் காயம் ஒருவர் பலி




நோட்டன் பிரிட்ஜ் எம். கிருஸ்ணா-

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் - டிக்கோய சலங்கந்தை பிரதான வீதியில் தனியார் பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி இன்று காலை 6.45 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

சலங்கந்த பகுதியிலிருந்து அட்டன் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியது. அட்டன் பகுதியில் இருந்து சலகந்த பகுதியை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துக்கு இடம் வழங்கப்பட்ட போதே குறித்த தனியார் பஸ் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது
குறித்த பஸ்ஸில் 17 தொழிலாளர்கள் பயணித்துள்ளதுடன் சாரதி உட்பட 16 பெண் தொழிலாளர்கள் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதுடன் ஆண் தொழிலாளியொருவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.
விபத்தில் காயங்களுக்கு உள்ளான 17 தொழிலாளர்களும் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின்; ஊடாக கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .
சம்பவத்தில் போடைஸ் பகுதி சேர்ந்த மரியசவரி என்ற 62 வயதுடைய ஆண் தொழிலாளி ஒருவர் உயிர்ழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்..
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :