ஞாயிறன்று மகா கும்பாபிஷேகத்திற்கான பொதுக்கூட்டம்



வி.ரி.சகாதேவராஜா-
ரலாற்றுப்பிரசித்திபெற்ற நிந்தவூர் ,மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சிஅம்மன் ஆலய மகா கும்பாபிஷேகத்திற்கான பொதுக்கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30மணிக்கு ஆலயபரிபாலனசபைத்தலைவர் கி.ஜெயசிறில் தலைமையில் ஆலயவளாகத்தில் நடைபெறவுள்ளது.

கடந்த ஆறுவருட காலத்திற்குப்பிற்பாடு நடைபெறவிருக்கும் இப்பொதுக்கூட்டத்திற்கு, அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ்கிராமங்களில் வாழும் மீனாட்சிஅம்மன் அடியார்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு பொதுவான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் இப்பொதுக்கூட்டத்தில் மகாகும்பாபிஷேகம் நடைபெறும் தினம் பற்றியும் நடைமுறைகள் பற்றியும் விளக்கமளிக்கவுள்ளார்.

அந்த மகாகும்பாபிசேகத்திற்கான பிரதான விழாக்குழு மற்றும் உப குழுக்கள் பகிரங்கமாகத் தெரிவுசெய்யப்படவிருக்கின்றன.எனவே சகல மீனாட்சிஅம்மன் அடியார்களையும் கலந்துகொள்ளுமாறும் மகாகும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற பரிபூரண ஒத்துழைப்பை நல்குமாறும் ஆலயபரிபாலனசபைச்செயலாளர் த.சண்முகநாதன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

மடத்தடி ஸ்ரீ மீனாட்சிஅம்மன் ஆலய வளாகத்தில் நிருமாணிக்கப்பட்டுள்ள புதிய ஆலயத்தின் ஆவர்த்தன மகா கும்பாபிஷேகம் அடுத்தவருடம் (2022) மார்ச் மாதமளவில் நடைபெற ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :