காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் சௌபாக்கியா திட்டத்தின் கீழ் பாதணி உற்பத்தி தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் உபகரணங்கள் நேற்று(20) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான ஹாபிஸ் Z.A.நசீர் அகமட் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் யு.உதய சிறீதர் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ்.சில்மியா, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி பத்மா ஜெயராஜ், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எம்.ஏ.மஜீட், காத்தான்குடி நகரசபை முன்னாள் தவிசாளர் மர்சூக் அஹமட்லெப்பை, சமுர்த்தி வலய முகாமையாளர்களான ஏ.எல்.இசட் பஹ்மி, எஸ்.எச்.முசம்மில் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது சௌபாக்கியா பாதணி உற்பத்திக் கிராமம் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பாதணி உற்பத்தி தொழில் முயற்சியாளர் குழுக்களுக்கான பாதணி உற்பத்தி உபகரணங்கள் கையளிக்கப்பட்டதுடன் சமுர்த்தி பயணாளிகள் இரண்டு இலட்சம் குடும்பங்களை மேம்படுத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்துக்கான தையல் இயந்திரங்களும் கையளிக்கப்பட்டன.
0 comments :
Post a Comment