ஜனாதிபதியை ஆட்சிக்கு கொண்டு வர உழைத்த, இந்த அரசாங்கத்தை அமைக்க முயற்சிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட அருண பத்திரிகை சோளப்பற்றாக்குறை காரணமாக சோளத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறுகிறது.சோள அறுவடை குறைவினால் திரிபோஷ உற்பத்தி குறையும் என கூறப்படுகிறது.570 மொட்ரிக் டொன் சோளத்தை விநியோகிக்க முடியும் என்று அம்பாறை,மொனராகலை மற்றும் ஹம்பந்தோட்டை மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் கூறுகின்றனர்.ஒரு நாளைக்கு 70 மொட்ரிக் டொன் சோளம் தேவை.
இந்த நாட்டுக்கு என்ன நடக்கிறது பால் மாவை வழங்க முடியாது என மில்கோ நிறுவனம் கூறுகிறது. இவ்வாறான நிலையில் திரிபோஷ யாருக்கு கொடுப்பது?
இந்த நாட்டில் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, ஆதரவற்ற மக்களின் குழந்தைகளுக்கு அரசாங்கம் இலவசமாக திரிபோஷ வழங்குகிறது.குழந்தைகள் மரணத்தை தேடி தெருக்களில் பிச்சை எடுக்கிறார்கள்.ஆகவே அரசாங்கம் மக்களுக்கு உண்மையாக இருப்பது மிகவும் நல்லது.இது முட்டாளான அரசாங்கமாகும்.இயற்கை விதை பொருளை உருவாக்க சாத்தியமான விதைகள் பழங்கால விதைகள் மற்றும் நடவுப் பொருட்களின் அடிப்படையில் தேவையான விதைகளை உருவாக்கவும் நட்டவும் பல வருட காலம் போகும்.மரபணு வலிமையை அடிப்படையாகக் கொண்ட விதைகள் உருவாக்கப்பட வேண்டும்.
இரசாயன உரங்களை தடை செய்ய வேண்டாம்,அது 20 வருட கால செயற்திட்டம் என்று ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ச்சியாக ஊடக சந்திப்புகளில் கூறி வந்தன.ஆனால் அரசாங்கம் கருத்திற் கொள்ளவே இல்லை.இன்று என்ன நடந்துள்ளது? எவ்வாறான தீர்மானங்களை எடுத்துள்ளனர்?
மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் ஒரு ஜோக்கர்,நாங்கள் தான் சிறப்பாக செயல்படுகிறோம் என்று கூறிய முதல் ஜோக்கர் அவர்தான்.பிரதமரும், அமைச்சரவையும் மிகப்பெரிய கோமாளிகள், நமது விவசாயத்துறை அமைச்சர் இன்று கூறுவது நாளை இல்லை, நாளை மதியம் கூறுவது அன்று இரவோடு வேறொன்று இவ்வாறு தான் கூறுவதயே மாற்றுகிறார்,இப்படிப்பட்ட சூழ்நிலையில் நம் நாட்டில் விவசாயம் அழிந்துவிடும், விவசாய செய்கை மேற்கொள்ள முடியாமல் வழியில்லாத போது அவர்கள் அவர்களின் காணிகளை விட்டு விடுவர்.சுத்தமாக பாழடைந்த காணிகளை, காணிகள் சட்டத்தின் கீழ் கோத்தபாய கறுப்புக் கடைக்காரர்களுக்கு குறித்த காணிகளை கையகப்படுத்தி பெரும் தோட்ட கம்பனிகளுக்கும் பெரு நிறுவனங்களுக்கும் வழங்க அரசாங்கம் தயாராகவுள்ளது. மகிந்தானந்தா என்கிற ஒருவரும் அரச குடும்பத்தின் கேலிக்கூத்து மிக்கவர் ஒருவரும் சேர்ந்து விவசாயத்திற்கு இவ்வாறு செய்வதன் மூலம் காணிகளை வெளிநாட்டு நிறுவனங களுக்கு முதலீடு என்ற பெயரில் வழங்கி இங்குள்ள விவசாயிகளை அவர்களின் கூலியாட்களாக மாற்ற முயற்சிக்கின்றனர்.
இரசாயன உரங்களைக் கொண்டு வந்து. தனது பாரம்பரிய விவசாய நிலத்தில் உள்ள விவசாயி இந்த நிறுவனங்களில் கூலியாட்களாகவும், கூலி தொழிலாளியாகவும் மாறுகிறார்.நாட்டை இந்த நிலைக்குத் தள்ளாமல் நாட்டை சரியான பாதைக்கு கொண்டு வர முடியாது என்றால்,நாட்டை அவமானப்படுத்தாமல், நாட்டை அழிக்காமல் பதவி விலகுங்கள் என்று கூறுகிறோம்.
இந்நாட்டில் இன்று பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.எல்லாமே விலை உயர்ந்தது.அவர்களால் பொதுமக்கள் முன் வீதிகளில் செல்ல முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது.இந்த நாட்டில் விவசாயம் அழிந்து, சுகாதார சேவை அழிந்து, சுகாதார சேவையால் கிடைத்த ஆதரவு கூட இல்லாமல் போனது மிகவும் வெட்கக்கேடானது.இந்த நாடு கிரீஸைத் தாண்டி ஒரு பேரழிவு தரும் வக்குரோத்து நாடாக மாறும் விளிம்பில் உள்ளது.உலக அமைப்புகளும் பொருளாதார அமைப்புகளும் இலங்கை ஒரு வக்குரோத்து நாடு என்று பிரகடனம் செய்யும்.
பிட்ச் போன்ற தரப்படுத்தல் நிறுவனங்களின் கூற்றுப்படி, நம் நாடு CC நிலைக்கு வீழ்ச்சியடைந்து இன்னும் வக்குரோத்து நாடாக மாறியுள்ளது என்பதை காட்டுகிறது. எனவே,கோட்டாபய ராஜபக்ச,மஹிந்த, ராஜபக்ச மற்றும் இந்த நாட்டை நாசப்படுத்த வேண்டாம் என்று கூறிகிறோம்.நாட்டை அழிக்கும் அனைத்து ராஜபக்சக்களுக்கு எதிராக,அமைச்சரவையில் உள்ள அனைவரும் இந்த நாட்டை அழிவின் விளிம்பிற்கு இட்டுச் செல்லும் இந்த முட்டாள்தனமான அரசாங்கத்துடன் இருக்க வேண்டாம் எனவும் எதிர்க்கட்சியில் வந்து அமர்ந்து கொள்ளுமாறும் கோருகிறோம்.
விவசாயத்திற்கு நடந்த தவறை ஒப்புக்கொள்ளவில்லை என்று விவசாய அமைச்சர் கூறுகிறார்.
வெட்கமில்லையா? வறட்சியால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு இதுவரை விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்கவில்லை.வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீடு இன்னும் வழங்கப்படவில்லை.ஜனாதிபதி உட்பட முழு அமைச்சரவையும் இராஜினாமா செய்து சிறப்பாக செய்யும் யாரிடமாவது ஆட்சியை கையளிக்குமாறு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.மக்களின் வாழ்வு பாழாகும் வரை காத்திருந்து கனவு காண தயாராக வேண்டாம்.
இது வரை அரிசியை இறக்குமதி செய்ய 9 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது.இந்த நாட்டில் உற்ப்பத்தி செய்ய முடியுமான அரிசியை அறுவடை செய்வதை விட்டு விட்டு இறக்குமதி செய்யும் போது, இவ்வளவு முட்டாள்தனமான அரசாங்கம் அதற்கு ஒன்பது மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கும் போது இந்த நாட்டுக்கு டொலர் எங்கு இருந்து கிடைக்கும்?
அண்மையில் இராணுவத்திடம் விவசாயத் துறை ஒப்படைக்கப்பட்டது.அது வெற்றிகரமான பணியல்ல.விவசாய பணிப்பாளர் நாயகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.இன்று விவசாய திணைக்களம் வெறுமனே போடப்பட்டுள்ளது.நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவராக ஜெனரல் சாந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.டை கட்டிக்கொண்டு அரிசி ஆலை உரிமையாளர்களிடம் பேசிவிட்டு வீட்டுக்கு வந்தார்.போரை நடத்துவதில் அவருக்கு எங்கள் மரியாதை உண்டு.தெரியாத வேலைக்குச் செல்லும்போது என்ன நடக்கும்? சவரன் வேலை செய்தால் வேலியே பேரழிவாகிவிடும் என்று ஒரு பழைய கவிஞரின் ஒரு பகுதி உள்ளது.அதைத்தான் திரு.கோத்தபாய செய்துள்ளார். திரு.கோத்தபாயவும் நாட்டை ஆள்வதற்கு ஏற்றவர் அல்லர்.அவருக்கே அரசியல் தெரியாது,அவர் நியமிக்கும் இராணுவ அதிகாரிகளுக்கு சிவில் நிர்வாகம் பற்றி தெரியாது.மஹிந்த ராஜபக்ஷ இன்று மௌனமாக பார்த்துக்கொண்டிருக்கிறார்.சில ராஜபக்ஷர்கள் நாட்டின் வளங்களை சூறையாடுகின்றனர்.இது மக்களுக்குரிய நாடு.மக்களின் எதிர்ப்பால் வீட்டிற்கு செல்ல வேண்டிய காலம் இந்த ஆட்சியாளர்களுக்கு விரைவில் ஏற்ப்படும் என தெரிவித்தார்.
0 comments :
Post a Comment