அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சகல அம்பியூலன்ஸ் வண்டிகளிடம் கட்டணம் அறவிடப்படமாட்டாது



ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ
ஊடகப் பிரிவு
நெடுஞ்சாலை அமைச்சு-
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் சகல அம்பியூலன்ஸ் வண்டிகளிடம் (அரச மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுடன் தொடர்புள்ள) அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் அறவிடாதிருக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
இதற்கு முன்னர் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அம்பியூலன்ஸ் வண்டிகளிடம் கட்டணம் அறவிடப்பட்டது.கொவிட் தொாற்று காரணமாக நாட்டு நிலைமையை கருத்திற் கொண்டு அதிவேக நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் சகல அம்பியூலன்ஸ்களிடம் கட்டணம் அறிவிடுவதை மே மாதம் 20 ஆம் திகதி முதல் மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மேலும் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :