கடல்சார் அனர்த்த தவிர்ப்பு தொடர்பாக மீனவர்களுடன் கலந்துரையாடிய பல்கலைக்கழகம் : பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராய்வு.



நூறுல் ஹுதா உமர், றாஸிக் நபாயிஸ், ஏ.எல்.எம். ஷினாஸ்-

லங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக அனர்த்த தவிர்ப்பு தொழிநுட்பவியல் ஆய்வு மையம் மற்றும் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் கடல்சார் அனர்த்த தவிர்ப்பு தொடர்பாக மீனவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தின் கூட்ட மண்டபத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.

தொழிநுட்ப பீடத்தின் முன்னாள் பீடாதிபதி கலாநிதி எம்.ஜீ. எம். தாரிகின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் கலந்து கொண்டு மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு கடல்சார் அனர்த்த தவிர்ப்பு தொடர்பிலான விடயங்களை கலந்துரையாடினார்.

கடலில் மீனவர்கள்படும் கஷ்டங்கள், மீனவர்களுக்கு பயிற்சி வழங்குவது, கடலில் மூழ்கி காணாமல் போகும் நிலை, கடல்சார் அனர்த்தங்கள், மீன்பிடி துறைமுக இயங்காமை போன்ற பல விடயங்களை எடுத்துரைத்த மீனவர்கள் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக அனர்த்த தவிர்ப்பு தொழிநுட்பவியல் ஆய்வு மையம் மற்றும் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மூலமாக நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிகழ்வில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள், அம்பாறை கரையோர பிரதேச மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :