கல்முனை - அக்கரைப்பற்று நெடுஞ்சாலை நிந்தவூரில் இன்று (8) காலை மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் சிக்கி மோட்டார் சைக்கிள் செலுத்துனர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கல்முனையை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளோன்றும் எதிரில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளன.
சம்மாந்துறை பொலிஸார் விபத்து சம்மந்தமான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment