முஸ்லிம் தலைமைகள் தொடர்ச்சியாக மலினப்படுவதை ஏற்க முடியாது : ம.கா அமைப்பாளர் சித்தீக் நதீர்மாளிகைக்காடு நிருபர்-
முஸ்லிம் தலைமைகள் தொடர்ச்சியாக மலினப்படுத்தப்படுவதை முஸ்லிம்கள் இனி ஒருபோதும் ஏற்க தயாரில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாவிதன்வெளி அமைப்பாளரும் தொழிலதிபருமான சித்தீக் நதீர் குறிப்பிட்டுள்ளார். நாவிதன்வெளி கட்சி முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர், தொடர்ந்து உரையாற்றும் போது:

முஸ்லிம் சமுகத்தை அடக்கி ஒடுக்கி ஆள நினைக்கும் இந்த அரசாங்கம் முதற் கட்டமாக முஸ்லிம் தலைமைகளை மலினப்படுத்தி உடல் ரீதியாக பலமிழக்கச் செய்யும் கைங்கரியத்தை மேற்கொண்டு வருகிறது. உள ரீதியாக மலினப்படுத்தி பின்னர், உடல் ரீதியாக பலமிழக்கச் செய்வதே இவர்களின் நோக்கம்.

எமது கட்சியின் தலைவரான ரிஷாத் பதியுதீனை அநியாயமாக சிறை பிடித்தபோது ஆரோக்கியமாக இருந்த போது சிறையில் இருதய நோய்க்கு உள்ளானார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பல நாள் சிகிச்சை பெற்றார். இப்போதும் அதற்கான சிகிச்சையை பெறுகிறார். அதேபோல், ஆஸாத் சாலி. எவ்வளவு திடகாத்திரமான தலைமை அவர். அவருக்கும் சிறை சென்றபோது இருதய நோய் ஏற்பட்டது. அண்மையில் வழக்கு விசாரணைக்கு சற்கர நாட்காலியில் அழைத்து வரப்படுகின்றார்.

ஆக, முஸ்லிம் தலைமைகளை உடல் ரீதியாக பலமிழக்கச் செய்யும் முயற்சி இங்கு அரங்கேற்றப்படுகின்றது. இவைகளை கண்டு முஸ்லிம் சமுகம் வேதனையடைந்துள்ளது. இன்னும் இன்னும் - எமது தலைமைகளை பலவீனப்படுத்தும் முயற்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசாங்கமும் இந்த செயற்பாட்டை உடன் நிறுத்த வேண்டும். வளர்ந்துவரும் நாடொன்றில் இன மத வேற்றுமை காட்டுவது ஆரோக்கியமான விடயமல்ல என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :