நுவரெலியாவில் விவசாய நிலங்களில் வெள்ளம் - காய்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும்



க.கிஷாந்தன்-
லையகத்தில் பிற்பகல் வேளையில் பெய்து வரும் அடை மழை காரணமாக வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் சிறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மரக்கறி தோட்டங்களில் வெள்ளம் பாய்ந்தோடியதால் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நுவரெலியா – மீபிலிமான, மாகொட, எல்க்பிளைன்ஸ் மற்றும் பிளாக்பூல் பகுதிகளில் கடும் மழை காரணமாக பெருமளவான மரக்கறி தோட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாததன் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு இந்த விவசாய காணிகள் மூழ்குவதற்கு முக்கிய காரணம் என விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

அத்தோடு, தோட்டங்களை அண்டிய வீடுகளுக்கும் வெள்ள நீர் புகுந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து இன்றி தத்தளித்து வரும் நாங்கள் இவ்வாறு விவசாய நிலங்களும் மழை வெள்ளத்தால் அழிந்தால், எதிர்காலத்தில் காய்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என விவசாயிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :