பாராளுமன்ற உறுப்பினர் ரமேஸ்வரனின் தீபாவளி வாழ்த்து செய்தி



தலவாக்கலை பி.கேதீஸ்-
லங்கை வாழ் இந்துக்களுக்கு எனது இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவரது தீபாவளி வாழ்த்துசெய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்-19 நோய்த்தொற்றிருந்து இலங்கைத் திருநாடு விரைவில் மீள்வதற்கும் எம் மக்களுக்கு எல்லா சுபீட்சங்களையும் தரும் நல்லதோர் எதிர்காலத்தின் ஆரம்ப நாளாக இத்தீபாவளித் திருநாள் அமைய வேண்டும். இருளை அகற்றி ஒளி ஏற்றும் எமது மக்களின் உயர்ந்த பண்டிகை தீபத்திருநாளாகும். 

இன்றைய சூழ்நிலையில் கொவிட் 19 கொரோனா தொற்றிலிருந்து எம்மையும் எமது உறவினர்களையும். நண்பர்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக நாம் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும். அத்துடன் கொரோனா வைரஸ் தொற்று இந்த உலகிலிருந்தும் எமது நாட்டிலிருந்தும் முழுமையாக ஒழிய மதஸ்தலங்களிலும் வீடுகளிலும் பிரார்த்தனைகளையும் மேற்கொள்வோம். 

இம்முறை நாம் அனைவரும் கொவிட் 19 சுகாதார விதிமுறைகளுக்கமைய தீபாவளியை கொண்டாடுவதனால் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளலாம். அன்று நரகாசுரனை வதம்செய்து அவன் அழிந்த பின்னர் தான் எமக்கு தீபாவளி கொண்டாட கிடைத்தது. இப்பொழுது நாம் நரகாசுரன் போன்ற ஒரு வைரஸின் பிடியில் சிக்கியுள்ளோம். இந்த பிடியிலிருந்து உலகளாவிய ரீதியில் மக்கள் என்று விடுபடுகிறார்களோ, அன்றுதான் எமக்குத் சுதந்திரமாக தீபாவளி, புதுவருடம், பொங்கல் அனைத்தும் கொண்டாட வாய்ப்பு ஏற்படும். அந்நாள் மிகவிரைவில் உருவாகும் என்ற நம்பிக்கை எம்மிடம் இருக்கின்றது. அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :