"அருணலு" தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு !நூருல் ஹுதா உமர்-
2021 ஆம் ஆண்டில் இரண்டு இலட்சம் சமுர்த்தி குடும்பங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.சி.எம் ரஷ்ஷானின் நேரடி பங்கேற்புடன் இடம்பெற்றது.

இறக்காமம் பிரதேச செயலாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் எம்.சி.எம் தஸ்லீமின் ஒருங்கிணைப்பின் கீழ் சமுர்த்தி திணைக்களமும், நிதியமைச்சும் இணைந்து மேற்கொள்ளும் சமுர்த்தி அருணலு வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஊடாக சமுர்த்தி குடும்பங்களை மேம்படுத்தும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இவ் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின்பால் நாட்டை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக குறித்த வேலைத்திட்டத்தின் ஊடாக வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் பண்ணை வளர்ப்புக்குத் தேவையான மாடு, ஆடு, கோழி என்பனவும் வாழ்வாதார உபகரணங்கள், வங்கிக் கடன்கள், விவசாய உதவிகள் உள்ளிட்ட இயற்கை பசளை நடைமுறை உள்ளீடுகள் போன்ற உதவித் திட்டங்கள் சமுர்த்தி வங்கிகள் மற்றும் பிரதேச செயலகங்கள் ரீதியாக வழங்கி வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் றிம்ஷியா அர்சாட், கிராம சேவக நிருவாக உத்தியோகத்தர் எச்.பி. எந்திரசிறி யஷரட்ன, சமுர்த்தி திட்ட முகாமையாளர் பிரியந்தி வேரகொட, சமுர்த்தி வங்கி முகாமையாளர் டி. எழிழவன், திட்ட உதவியாளர் எம்.ஐ.எம். மக்பூல், பிரிவுகளுக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :