அட்டன் டிக்கோயா மணிக்கவத்தை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
மணிக்கவத்தையை சேர்ந்த 62 வயதுடைய கே.சுந்தர்ராஜ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அட்டனிலிருந்து டிக்கோயா மணிக்கவத்தை பகுதிக்கு சென்ற முச்சக்கரவண்டி 24/11 இரவு 6.45 மணியளவில் வீதியை விட்டு விலகி 25 அடி பள்ளத்தில்வீழ்ந்து விபத்துக்குள்ளானது
முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட நால்வர் பயணித்துள்ள நிலையில் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்கையில் உயிரிழந்துள்ளர்.
மேலும் சாரதி உட்பட மேலும் இருவர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த பாதை குன்றும் குழியுமாக காணப்படுவதனால் சாரதியின் கட்டுப்பாட்டை மீறி முச்க்கரவண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது
விபத்து தொடர்பில் மேலதிகவிசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment