தமிழ்ஈழவிடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பவரின் பிறந்தநாளை நினைவுகூர்ந்து நாட்டில் நடந்த யுத்தத்தின்போது காணாமல்போன தமிழ்உறவுகளின் குடும்பத்தினர் விளக்கேற்றி நினைவுகூர்தலை நடாத்த தடைவிதிக்கப்படுவதாக காரைதீவு பிரதேசசபைத்தவிசாளரும்,தமிழரசுகட்சிமாவட்டபிரதிநிதியுமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலுக்கு தடையுத்தரவு பொலிசாரால் கையளிக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை நீதிவான்நீதிமன்ற நீதிவானால் வழங்கப்பட்டு;ள்ள இவ் உத்தரவை நேற்று(24)புதன்கிழமை சம்மாந்துறைப்பொலிசார் தவிசாளரது இல்லத்திற்குச்சென்று கையளித்தனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனாத்தொற்று அதிகரித்துவரும்சூழ்நிலையில் பொதுமக்கள் சுகாதாரநடவடிக்கைகளை இறுக்கமாக கடைப்பிடிக்கவேண்டியிருப்பதனால் இத்தகைய ஒன்றுகூடல் செயற்பாட்டுக்கு அதடையுத்தரவு பிறப்பிக்குமாறு சம்மாந்துறை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஜெயலத் நீதிமன்றுக்கு அறிக்கைசெய்துள்ளார்.
அதற்கமைய 22ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சம்மாந்துறை நீதிமன்ற நியாயாதிக்கத்துக்குட்பட்ட காரைதீவுப்பிரதேசத்தில் இத்தகைய நினைவுகூறல்கள் நடைபெற தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இபக்காலப்பகுதியில் பொதுமக்களின் சொத்துக்களுக்கு சேதத்தையும் ,அழிவையும் ஏற்படுத்தும்வகையிலும், ஏனைய பொதுமக்களுக்கு கோபத்தையும் ,ஆத்திரத்தையும் ஏற்படுத்தும்வகையிலும் ,கொவிட் நோய்பரவும்வகையிலும் இந்தநினைவுகூறல்களுக்கு தடைவிதிப்பதில் நீதிமன்றம் திருப்தியடைவதால் இத்தடையுத்தரவு வழங்கப்படுகிறது.
அதேவேளை, அன்றையதினம் 200வறிய மாணவர்களுக்கு உலர்உணவுப்பார்சலை விநியோகிக்க காரைதீவு நடராஜானாந்தா வீதியைச்சேர்ந்த தர்மலிங்கம் ராஜலிங்கம் என்பவர் திட்டமிட்டிருப்பதால், அதனையும் தடைசெய்வதாக தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment