கண்டி பன்வில கலகிரிய தோட்ட மக்களுக்கு புதிய வாழ்வு எனும் திட்டத்தின் கீழ் 20 தனி வீடுளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும், பிராஜா சக்தி நிறுவனத்தின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி தலைமையில் 27.11.2021 அன்று இடம்பெற்றது.
கண்டி பன்வில கலகிரிய தோட்ட மக்களுக்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் பணிப்புக்கு அமைய தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் 2 கோடி 60 இலட்சம் ரூபாய் நிதி ஓதுக்கீட்டில் இவ் வீடமைப்பு திட்டம் செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தொழிற்சங்க பணிப்பாளர், தோட்ட அதிகாரி, பிரதேச சபை உறுப்பினர்கள், இளைஞர் அணி அமைப்பாளர்கள், பிரஜாசக்தி செயற்திட்டத்தின் அதிகாரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் வரேவேரற்கப்படுவதையும், பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்படுவதையும், கலந்து கொண்ட பொது மக்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
0 comments :
Post a Comment