நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிக்கண்ட போதிலும் நாட்டின் அபிவிருத்தித்திட்டங்கள் கைவிடப்படவில்லை - எம்.பி ரமேஷ்வரன் தெரிவிப்பு



க.கிஷாந்தன்-
கொரோனா தொற்று காரணமாக முழு உலகமும் பொருளாதாரத்தில் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்நிலையில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டாலும், இந்த நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களும், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அவர்களும் எந்த ஒரு அபிவிருத்தித்திட்டத்தினையும் கைவிடவில்லை என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.

சமூர்த்தி அருணலு எனும் திட்டத்தின் கீழ் அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமூர்த்தி குடும்பங்களுக்கு வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கிணங்க 20 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள், இரண்டு குடும்பங்களுக்கு லொத்தர் சீட்டிலிப்பின் மூலம் கிடைக்கப்பெற்ற நிதி கையளிப்பு, இரு மாணவர்களுக்கு சிப்தார என்ற புலமைப்பரிசில் நிதி கையளிப்பு, மேலும் இரு குடும்பங்களுக்கு மலசலகூடம் பெற்றுக்கொள்வதற்கான நிதி வழங்கல், மற்றும் பொருளாதார விருத்திக்காக கடன் வழங்கல் உள்ளிட்ட நிகழ்வுகள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஸ்வரன் தலைமையில் இன்று (28) திகதி அட்டன் டிக்கோயா நகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பகமுவ பிரதேச செயலக அதிகாரிகள், நுவெரலியா மாவட்ட செயலக அதிகாரிகள், அட்டன் டிக்கோயா நகர சபை தலைவர், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்து மக்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்..

நாட்டினுடைய பொருளாதாரத்தினை உயர்த்த வேண்டும் என்பதற்காக இந்த வருட வரவு செலவு திட்டத்திலும் பாரிய அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்காக இந்த வருட வரவு செலவு திட்டத்தில் நிதி அமைச்சர் பல மில்லியன் ரூபாய்களை ஒவ்வொரு அமைச்சுக்கும் ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தினை கிராம மட்டத்திலிருந்து கட்டியெழுப்புவதற்காக எதிர்காலத்தில் நாம் வெளிநாட்டினை நம்பியிருக்க கூடாது என்பதற்காகத்தான் அவ்வாறான ஒரு திட்டத்தினை முன்னெடுத்துள்ளார்.
அவ்வாறான ஒரு நிலையில் தான் இரண்டு வாரங்களுக்கு முன் பொகவந்தலாவ பகுதியில் பல மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை பெற்றுக்கொடுத்தோம். அதற்கு சமூர்த்தி அமைச்சின் ஊடாகவும் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்கள் ஊடாகவும் நிதி பெற்றுக்கொடுக்கப்பட்டன.

ஆகவே இந்த சுயதொழில் ஊடாக வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காகவே பல லட்சம் ரூபா நிதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. அதே போன்று தான் இன்றும் பல சுயதொழிலாளர்கள் தெரிவு செய்து பொருட்கள் பெற்றுக்கொடுக்கப்படுகின்றது. இதன் நீங்கள் உங்கள் வாழ்க்கை தரத்தினை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்பதே எமது அனைவரதும் எதிர்ப்பார்ப்பாகும்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக பல நாடுகள் அபிவிருத்தி திட்டங்களை நிறுத்தியிருக்கின்றார்கள். ஆனால் நாம் நாட்டில் கொரோனா காலத்தின் போது எல்லோருக்கும் நிவாரணங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டதுடன் இன்று அனைவருக்கும் தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
இன்று பலர் விலைவாசிகள் சம்பந்தமாக சொல்கிறார்கள் நம்நாட்டில் மாத்திரம் விலைவாசி உயரவில்லை. மரக்கறி விலைவாசிகள் அதிகம் என்றும் உங்களுக்கு தெரியும். நுவரெலியா மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் மரக்கறிகள் பாதிக்கப்பட்டன. இது நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டன.

நுவரெலியா மாவட்டத்தில் உரம் இல்லாத பிரச்சினைகள் காணப்பட்டன அதனை நாங்கள் ஜனாதிபதியிடம் பேசி இப்போது தீர்வுகளை பெற்றுக்கொடுத்துள்ளோம். சிலர் உரம் இல்லை என்பதனை மரக்கறி விலை என்பதனையும் ஊடகங்களுடாக தெரிவித்தார்களே ஒழிய அவர்கள் அதற்காக எதுவும் செய்யவில்லை.

இன்று நாடு பொருளாதார ரீதியாக பாரிய அளவில் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளது. நாடு கொண்டு செல்வதற்கே சிக்கலான நிலையில் நாட்டு மக்களுக்காக பல்வேறு பணிகளை முன்னெடுத்துள்ளது. எனவே அதனை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :