இலங்கை உளவியல் அமைப்பின் ஏற்பாட்டில் மருதமுனை ஹியூமன் லிங்க் நிறுவன வளாகத்தில் மாமரக் கன்றுகள் நடுகைபி.எம்.எம்.ஏ. காதர்-
லங்கையில் இயங்கிவரும் (Ceylon CCPA) உளவியல் அமைப்பின் ஏற்பாட்டில் மருதமுனை ஹியூமன் லிங்க் நிறுவன வளாகத்தில் மாமரக் கன்றுகளை நடுகை செய்த நிகழ்வ (2021.11.08) அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வு ஹியூமன் லிங்க் நிறுவனத்தின் தலைவர் ஏ.எல் கமறுதீன் தலைமையில் நடைபெற்றது.

இதில் இலங்கையில் இயங்கிவரும் (Ceylon CCPA) உளவியல் அமைப்பின் தலைவரும் மனநல மருத்துவருமான டொக்டர் எம்.எச்.எம். முனாசிக் பிரதம அதிதியாகவும் இவ்வமைப்பின் பிரதான பதிவாளர் உளநல நிபுணர் எம்.எம். நூறா சஸ்னியா, இவ்வமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் குழந்தை வைத்திய நிபுணர் டொக்டர் பி.டி.எஸ். சபீனா ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டு மாமரக் கன்றுகளை நடுகை செய்தனர்.

இந்த உளவியல் அமைப்பானது உளவியல் கற்கை நெறியின் முக்கித்துவம் அறிந்து சகல துறைகளிலுமுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுகின்றவர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் மற்றும் பாடசாலை கல்வியைப் பூர்த்தி செய்துவிட்டு வீட்டில் இருப்பவர்களுக்கும் புலமைப் பரிசில் திட்டத்தின் ஊடாக உளவியல் கல்வியை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :