பாராளுமன்ற உறுப்பினர் முஷாரபிடம் சபீர் ஹமீடின் பகிரங்க கேள்விகள்...கில இலங்கை மக்கள் காங்கிரஸில் இருந்து அதன் மயில் சின்னத்தில் அம்பாறை மாவட்டத்தில் முதன் முதலாக பாராளுமன்ற உறுப்பினராக சென்றவர் நீங்கள். சுமார் 50 வருடங்களாக பொத்துவில் மண் இழந்திருந்த தேர்தல் மூலமான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுத் தருவதில் முக்கிய பங்காற்றியவர் உங்களுடைய கட்சித் தலைவர் ரிசாட் பதியூர்தீன் என்பதை நீங்கள் அறிவீர்கள். 

பொத்துவில் மண்ணுக்கான MP தாகத்தை தீர்த்த கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்ற கட்சி இருக்கும் என்பதையும் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். இந்த அடிப்படையில் தலைவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அவர் சிறை பிடிக்கப்பட்டதிலிருந்து தற்போது நீதிமன்ற உத்தரவுக்கமைய பிணையில் விடுவிக்கப்பட்டது வரைக்கும் உண்மையான ஒரு மனச் சாட்சியாளராக இறைவனை பயந்தவனாக உங்களுடைய பங்களிப்பு நேரடியாகவோ மறைமுகமாகவோ எப்படி இருந்தது என்பதை உங்களுக்கு இப்போதாவது விளக்க முடியுமா? தலைவர் தான் பிணையில் வந்திருக்கின்றார் நீங்கள் தற்போது பகிரங்கமாக கூறலாம் தானே ஏனென்றால்;
 
1.தலைவருக்கு எதிராக முதன்முதலாக கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட போது அதில் நீங்கள் பங்கெடுக்கவில்லை
2. கட்சித் தலைவர் 20 திருத்தம் ,20A ஆகிய இரண்டு திருத்தத்திற்கும் எதிராக வாக்களிக்கும் போது நீங்கள் தலைவர் எதிராக வாக்களித்த 20A ஐ நீங்கள் ஆதரித்ததன் மர்மம் என்ன? தலைவர் உங்களுக்கு 20 Aஆதரிக்குமாறு வற்புறுத்தினார் /ஆலோசனை வழங்கினாரா? என்பதை பகிரங்கமாக கூற முடியுமா ?
3.தலைவர் அரசியல் கைதியாக பிடிக்கப்பட்ட இருக்கிறார் என்று பலர் கூறியபோது அரசாங்கத்தோடு இருக்கின்ற பசில் ராஜபக்ச மட்டும் மிக நல்லவர் என்ற பாணியில் உங்களுடைய கணிப்பிட்டு இருந்ததற்கான காரணம் என்ன? அப்படி நல்லவராக இருந்தும் ஆறு மாத காலம் தலைவர் சிறைப்பிடிக்கப்பட்டு இருந்தும் அந்த நபரைக் கொண்டு நீங்கள் வாக்களித்த நல்லவரை கொண்டு அவரை விடுவிக்க முடியாமல் போனது ஏன்?
4. நாட்டில் இனவாதத்தை தூண்டி முஸ்லிம்களை மிகக் கேவலமாக மலினப்படுத்திய உதயன் கம்பன்பிலவிற்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை வாக்கெடுப்பு நடத்தப்பட்ட (தலைவர் அவர்களின் மனைவியும் சிறப்பிடிக்கப்பட்ட அதே நாளில்) போது முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமல் இருந்த நிலையில், நீங்கள் உதயன் கம்பன்பிலவுக்கு ஆதரவாக வாக்களித்ததன் நோக்கம் என்ன? தலைவர் ஆதரவாக வாக்களிக்கச் சொல்லி சொன்னாரா என்பதை பகிரங்கமாக கூற முடியுமா?
5. எம்பி பதவியினால் வரும் எந்த சுக பாகங்களையும் எடுத்து செலவு செய்ய மாட்டேன் என்னுடைய கோட் சூட்டை வைத்து வழக்கு பேசிய தொழிலை வைத்து என்னுடைய குடும்பத்தை நடத்துவேன் என்று பள்ளிவாசலில் சாத்தியமற்ற நீங்கள் இதுவரைக்கும் அந்த சத்தியத்தை காப்பாற்றிக் கொண்டு இருக்கின்றீர்கள் என்பதை அந்த பள்ளிவாசலில் மீண்டும் ஒருமுறை சத்தியம் செய்து நிரூபிக்க முடியுமா?
6. அதேநேரம் தற்போது முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற சமகாலப் பிரச்சினைகள் தொடர்பில் அறிவார்ந்த அரசியல் ஒன்றை இராஜதந்திர முறையில் நீங்கள் கையாளுவதாக கதை கூறுகின்றீர்களே அந்த அறிவார்ந்த அரசியல் சார்ந்த விடயம் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் உங்களுடைய முடிவா? அல்லது தொழில் சார்ந்த பலருடைய ஆலோசனையைப் பெற்றே முடிவா?
உங்களுடைய பணிகள் போக்குகளை நீங்கள் கூறாவிட்டாலும் உங்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்கள் துறை சார்ந்தவர்களாக இருந்தால் அவர்களையாவது நீங்கள் எங்களுக்கு பகிரங்கமாக சொல்வீர்களாக இருந்தால் அவர்கள் மீது நாங்கள் திருப்திப்படும் போது உங்களுடைய போக்கிலும் நாங்கள் திருப்திப்படக் கூடியதாக இருக்கும் அல்லவா?
7. பகிரங்கமாக தங்களுடைய சமூகம் சார்ந்த பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் பலரும் பேசுகிற போது நீங்கள் மாத்திரம் பாராளுமன்றத்தில் கதை சொல்பவராக இருப்பதோடு பாராளுமன்றத்திற்கு வெளியில் வந்து குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓடுவது போன்று நீங்கள் இந்த பேஸ்புக்கில் மட்டும் உங்களுடைய கருத்துக்கள் குறிப்பிடுவதன் நோக்கம் என்ன? நீங்கள் அல்லாஹ்வை முன்னிறுத்தி செல்லுங்கள் தலைவருக்காக தலைவரோடு மக்கள் தந்த வாக்குறுதிகாக கட்சியோடு இருக்கிறீர்களா? அல்லது கட்சி விட்டு மாறி விட்டீர்களா?
8. தலைவர் பிணையில் விடுவிக்கப்பட்டு ஒரு வாரம் கடந்தும் நீங்கள் இன்னமும் தலைவரை சந்திக்காமல் இருப்பது உங்கள் போராளிகள் சொல்வது போன்று நீங்கள் பாராளுமன்றத்தில் சந்தித்த தானே என்ற காரணத்தினாலா?
9. உங்களை பற்றி FB யில் வரும் விமர்சனத்துக்கு கூட FB மூலம் பதில் வழங்கும் நீங்கள் கட்சியின் போராளிகள் இன்னமும் ஏன் கௌரவ முஷ்ரரப் mp தலைவரை சந்திக்கவில்லை என்று சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கும் போது நீங்கள் மௌனமாக இருப்பது? அல்லது இது தலைவரை சந்தித்து அந்த விமசனத்தை முடிவுக்கு கொண்டு வர நீங்கள் இன்னமும் முனையாவில்லை என்பது நீங்கள் கட்சியோடும் தலைவரோடும் இல்லை என்று சொல்ல வருக்கின்றீர்களா?
இது ஒரு ஜனநாயக ரீதியான முறையில் எனக்குள் ஏற்பட்டிருக்கின்ற கேள்விகளுக்கு உங்களிடமிருந்து பதில்களை எதிர்பார்க்கிறேன்.

சபீர் ஹமீட்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :