பதியத்தலாவவில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் உட்பட இரண்டு கட்ட தடுப்பூசிகளையும் பெற்ற 18 பேருக்கு கொரோனாமினுவாங்கொடை நிருபர்-
தியத்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி ஒருவர், பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவா் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தில் 5 பேர் உள்ளிட்ட 18 பேருக்கு, (28 ஆம் திகதி) கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, பதியத்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

பதியத்தலாவ, சரணகம, ஹாகம்வெல, கிரவான, தலாபிட்டஓய வடக்கு உள்ளிட்ட பிரதேசங்களிலுள்ள ஏராளமான நோயாளர்களுக்கே இவ்வாறு சில தினங்களாக கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும், காரியாலயம் தெரிவித்துள்ளது.

கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் அனைவரும், இரண்டு கட்ட தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டுள்ளவர்கள் என்பதுடன், இந்த நோயாளர்களில் சிலர் பாடசாலை மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :