15 வயதுடைய இந்த பாடசாலை மாணவி கம்பஹா பாடசாலையொன்றில் கல்வி கற்று வருகின்றார். பாடசாலைக் கல்வியில் ஈடுபட்டிருந்த குறித்த மாணவி கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவனுடன் இணையவழி ஊடாக அறிமுகமாகி, காதல் வலையில் சிக்கி, தொலைபேசியின் ஊடாக அவனின் கோரிக்கைக்கு இணங்க தனது நிர்வாண வீடியோக்களை அவனுக்கு அனுப்பியுள்ளாள்.
சிறிது காலங்களின் பின்னர், தன்னுடனான காதல் உறவை முறித்துக் கொண்டதால் கோபமடைந்த 19 வயது காதலன் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு சிறுமியின் குறித்த வீடியோவை அனுப்பியுள்ளான்.
இது தொடர்பாக சிறுமியின் குடும்பத்தினர் கம்பஹா பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து சந்தேக நபர் கம்பஹா பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்.
அப்போதுதான் அந்த சிறுமி தன் காதலனை முதல் தடவையாக நேரடியாக பார்த்துள்ளாள். அவன் அங்கு அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு வீடியோவை அழித்து விடுவதாக கூறி விட்டு சென்றுள்ளான்.
ஆனால், குறித்த சந்தேக நபர் மீண்டும் அந்த வீடியோக்களை அனுப்பத் தொடங்கியதால், சிறுமியின் பெற்றோர் சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தர்ஷிகா குமாரியிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதன்படி, பொலிஸ் குழு ஒன்று கண்டிக்கு சென்று குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர். அவன் கைது செய்யப்பட்ட நேரத்தில், அந்த சிறுமியின் நிர்வாண காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை தயாரித்து கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேக நபர் மேலதிக கல்விக்காக ஜப்பான் செல்வதற்கு விசா பெற்றிருந்த ஒருவர் என்பதுடன், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
இதன்மூலம் விரக்தி அடைந்த சிறுமி தற்கொலைக்கு முயற்சித்த சந்தர்ப்பத்தில் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment