மாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் நூற்றாண்டு விழாவின் உத்தியோகபூர்வ இலச்சினை வெளியீடு



மாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் நூற்றாண்டு விழாவுக்கான உத்தியோகபூர்வ இலச்சினை வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 24 ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.

இலங்கையின் மிக முக்கியமான முஸ்லிம் பாடசாலைகளுள் ஒன்றான மாவனல்லை ஸாஹிரா கல்லூரியானது இவ்வருடம் தனது நூற்றாண்டினைப் பூர்த்தி செய்துள்ளது. எனினும் நாட்டின் சுகாதார நிலைமைகள் காரணமாக நூற்றாண்டு விழா நிகழ்வுகள் பிற்போடப்பட்டுள்ள நிலையில் நூற்றாண்டு விழாவின் உத்தியோகபூர்வ இலச்சினை வெளியீட்டு நிகழ்வானது இணைய வெளி ஊடாகவே நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
இதன்படி இந்நிழ்வானது கல்லூரியின் உத்தியோகபூர்வ யூடியூப் தளத்தின் ஊடாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24ம் திகதி) இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும்.
இலச்சினை வெளியீட்டு நிகழ்வைக் தொடர்ந்து எதிர்வரும் வாரங்களில் இரத்ததான முகாமொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறுபட்ட நிகழ்வுகளும் நாட்டின் நிலைமைகள் சீரானதன் பின்னர் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :