கொரோனாவைக்காட்டி 2 மாதங்களாக மாநகரசபை அமர்வு இழுத்தடிப்பு!



05மாதங்கள் கூட்டமில்லை:கல்முனை மாநகரசபை உறுப்பினர் ராஜன் கடும்விசனம்!
வி.ரி.சகாதேவராஜா-
நாட்டில் நிலவும் கொரோனாவைக் காரணம்காட்டி கடந்த இரண்டு மாதங்களாக, கல்முனை மாநகரசபை அமர்வுகள் நடாத்தப்படாமல் தொடர்ச்சியாக இழுத்தடிக்கப்பட்டுவருவதாக அங்குள்ள மாநகரசபை உறுப்பினர்கள் கடும் விசனத்தை தெரிவித்துவருகின்றார்கள்.

இதுவரை கொரோனாவைக்காரணம்காட்டி 5தடவைகள் 5மாதங்கள் மாதாந்த அமர்வுகள் ரத்துச்செய்யப்பட்டிருக்கின்றன.கடந்தாண்டில் டிசம்பர் மாதத்திலும் ,இவ்வாண்டில் மே, யூன், ஆகஸ்ட் ,செப்ரம்பர் ஆகிய மாதங்களில் கூட்டம் நடைபெறவில்லை.

செப்ரம்பர்மாதத்திற்கான அமர்வு இறுதியாக நேற்றுமுன்தினம்
(22) புதன்கிழமை பிற்கல் 2.30 மணியளவில் இடம்பெறவிருந்தது. உறுப்பினர்கள் வருகை தந்திருந்தும், இறுதிநேரத்தில் கூட்டம் நடைபெறாது என செயலாளர் அறிவித்தார். அதனால் இந்த மாதத்திற்கான கூட்டமும் நடைபெறவில்லை.
இறுதியாக ,கடந்த ஜூலை மாதம் மாதாந்த கூட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ச்சியாக கூட்டங்கள் நடைபெறாதபோதிலும் மேயர் மற்றும் உறுப்பினர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டிருக்கிறது என்பது இங்கு சுட்டிக்காட்டத்ததக்கது. கூட்டங்களுக்கு வந்ததாக ஒப்பமிட்டதால் கொடுப்பனவு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழத்தேசியக்கூட்டமைப்பின் கல்முனை நகரத்திற்கான உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் கூறுகையில்:

கடந்த பலமாதங்களாக கூட்டத்திற்கான கடிதங்கள் வருகின்றன. சபைக்கு வந்தால் கூட்டம் ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக செயலாளர் அறிவிக்கின்றார்.நாங்கள் பலத்த வேலைப் பழுக்களுக்கு மத்தியில் கூட்டத்திற்காக வந்தால் இப்படி நடப்பது ஏமாற்றமே.
நாட்டில் ஏனைய உள்ளுராட்சிசபைகள் கூட்டங்களை நடாத்தும்போது கல்முனை மாநகரசபைக்கு மட்டும் ஏனிந்த கொரோனாச் சாட்டு?

225பேரைக்கொண்ட பாராளுமன்றம்கூட கூட்டப்படுகிறது. நாட்டிலுள்ள அத்தனை சபைகளிலும் மாதாந்த கூட்டம் நடைபெற்றுவருகிறது.ஏன் இங்கு கூட வேறு கூட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் மாதாந்த அமர்வு என்றால் மட்டும் கொரோனா வருகிறது.

மேயர் தொடர்ச்சியாக இவ்வாறு கூட்டங்களை இழுத்தடித்துவருவது நல்லதல்ல. இது எம்மைத்தெரிந்த மக்களது உரிமையை மீறுகின்ற செயலாககருதலாம்.முன்னறிவித்தலின்றி இவ்வாறு கூட்டம் ரத்துச்செய்யப்படுகின்றமை தான்தோன்றித்தனமான செயலாகும்.

கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு செய்யவேண்டிய அத்தியாவசிய சேவை சேவை எவ்வளவோ இருக்கிறது. ஏனைய சபைகள் பலவிதமான சேவைகளை செய்துவருகின்றன.கொரோனாவுக்கென விசேடசேவைகளை மாத்தளை மாநகரசபை போன்ற பல சபைகள் முன்னுதாரணமாக செய்துவருகின்றன. ஆனால் நாம் எதுவுமே செய்யாமல் வாழாவிருக்கிறோம். இதற்காகவா மக்கள் எங்களைத் தெரிந்தார்கள்?

சபையில் வருமானம் இல்லையென்றால் சபையைக்கூட்டி வருமானம்வரும் மார்க்கங்களை உறுப்பினர்களிடமிருந்து கேட்டறியவேண்டும்.
உடனடியாக கூட்டம் நடாத்தப்படவேண்டும். மக்களது பிரச்சினைகள் ஆராயப்படவேண்டும் .தேவைகள் பூர்த்திசெய்யப்படவேண்டும். என்றார்.

அங்கு உறுப்பினர்களான க.சிவலிங்கம் எம்.ஜ.எம்.மனாப் உள்ளிட்ட பலரும் கருத்துரைத்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :