கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வட்டமடுவில் கொரோனாவினால் இறந்தவர்களை நல்லடக்கம் செய்வதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் தற்போது செய்து வருவதாக கிண்ணியா பிரதேச சபையின் தவிசாளர் கே.எம். நிகார் தெரிவித்துள்ளார்.
கிண்ணியா பிரதேச சபையின் நலன்புரி அமைப்பினால் உட்கட்டமைப்பு வசதிகள் கட்டம் கட்டமாக முன்னெடுத்து வருவதாகவும்,கிண்ணியா பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரின் அனுமதி கிடைத்துள்ளதாகவும், சுகாதார அமைச்சின் அனுமதி கிடைத்தவுடன் உடல்களை நல்லடக்கம் செய்வதற்கான முன்னெடுப்புகளை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு தனிப்பட்டவர்களும் பொதுநல அமைப்புகளும் உதவி செய்து வருவதாகவும், அவ்வாறு உதவுவோருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது மூவின மக்களுக்காக அமைக்கப்பட்ட ஒரு பொது மையவாடியாகும்.இதில் அடக்கம் செய்வதற்கு இன,மத,குல,பேதம் காட்ட முடியாது என்றார்.
0 comments :
Post a Comment