ஓட்டமாவடியில் நிலப்பற்றாக்குறை கொரோனா நல்லடக்கப் பணிகளை வேறு இடங்களுக்கு மாற்றுமாறு 69 அமைப்புகள் ஒன்றிணைந்து மகஜர்



எச்.எம்.எம்.பர்ஸான்-
கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களை அடக்கம் செய்யும் ஓட்டமாவடி மஜ்மா நகர் பகுதியில் நில பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அங்கு இடம்பெறும் நல்லடக்கப் பணிகளை தேசியத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள இடங்களுக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்து கல்குடா தொகுதியிலுள்ள 69 அமைப்புகள் ஒன்றிணைந்த கூட்டமைப்பு இன்று (24) ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜாவிடம் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியல் நிலப்பற்றாக்குறை நிலவியுள்ளது. எனவே, ஓட்டமாவடி மஜ்மா நகரில் குறித்த காணி மாத்திரம்தான் அங்கு உள்ளது. அதில்தான் விவசாயம் செய்ய வேண்டும். குடியிருப்பாளர்களும் வசிக்க வேண்டும் அத்துடன் அங்குதான் குப்பைகளும் கொட்டப்பட வேண்டும் என்பன விடயங்களை சுட்டிக்காட்டியும், கிண்ணியா வட்டமடு பகுதில் கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களை நல்லடக்கம் செய்ய பதினைந்து ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது அங்கு அடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும் கோரிக்கை விடுத்து பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

69 அமைப்புகள் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் தலைவர் எம்.ரி.எம்.நிஸார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மகஜர் கையளிக்கும் நிகழ்வில் சட்டத்தரணி ஹபீப் றிபான், ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ஐ.ஹாமித் சிறாஜி, ஏ.ஜீ.அசீஸுர் ரஹீம், மஜ்மா நகர் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் ஏ.எல்.சமீம் உட்பட உலமாக்கள், பள்ளிவாசல்கள் நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :