நல்லிணக்கைத்தை ஏற்படுத்தும் திரைப்படத்திற்கு வரவேற்பு...!



ஹஸ்பர் ஏ ஹலீம்-
டகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான வடமலை ராஜ்குமாரின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட ”த சீட்” (THE SEAT ) என்ற விழிப்புணர்வு திரைப்படம் நேற்று 21ம் திகதி மாலை இணையத்தளத்தல் வெளியிடப்பட்டது.
இத் திரைப்படமானது பிரிடிஸ் கவுன்சில் அனுசரனையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்ட இத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

உள்ளுர் கலைஞர்களையும் தேர்ச்சி பெற்ற தொழினுட்ப கலைஞர்களையும் இணைத்து தற்காலத்துக்கு ஏற்றாற் போல் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் 3 நிமிடமும் 23 நொடிகள் மட்டுமே கொண்டது.

நாம் அன்றாடம் சந்திக்கும் சிக்கல்களை எவ்வாறு கலைந்து புரிந்துணர்வும் நல்லிணக்கத்துடனும் வாழலாம் என்பதை எளியமையாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பெண்களுக்கான சம அந்தஸ்தும் உரிமையும் பாதுகாக்கப்படவேண்டும் என்ற எண்ணத்தையும் கதாசிரியர் ஆனந்த ரமணன் நிலை நிறுத்தியுள்ளார். இத்திரைப்படம் பார்ப்பவர்கள் மத்தியில் இயக்குனரின் எண்ணக்கருவான சமாதானமும் புரிந்துணர்வும் துளிர்விடுவதை உணர முடிகிறது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :