சாய்ந்தமருது கிரிக்கெட் சங்கத்தின் நிருவாகிகள்!சாய்ந்தமருது கிரிக்கெட் சங்கத்தின் உத்தியோகபூர்வ நிருவாக சபை தீர்மானத்திற்கமைய 2021/2022 ம் ஆண்டுக்கான நிருவாக சபை பதவிகளுக்கான வேட்புமனு இன்று 06.06.2021 மாலை 5.30 மணிக்கு நிறைவுபெற்றது .
இச்சங்கத்தின் 19 அங்கத்துவ கழகங்களில் 12 கழகங்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தது. இவ்வேட்புமனுக்கள் நிருவாக சபை உறுப்பினர்களின் முன்னிலையில் திறக்கப்பட்டபோது இந்நிருவாக சபை பதவிகளுக்கு கீழ்வருவோர் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இப்பதவிகளில் சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் வி.கழக பிரதிச் செயலாளர் MM.நிஜாமுடீன் அவர்கள் தலைவராகவும், ஹொலி ஹீறோஸ் வி .கழக கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் A.M.றிசாத் அவர்கள் செயலாளராகவும், சன் Fப்ளவர் வி.கழக செயலாளர் AS. அஸ்வர் (நபீர்) பொருலாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
மற்றும் உபதலைவர்களாக LAMCO Sports Club செயலாளர் A.M.றம்ஸான்
REAL POWER SC அணித் தலைவர் S.சர்ஜுன் ஆகியோரும் உப செயலாளராக AL MASS SC செயலாளர் A.G.அன்வர் அவர்களும் நிருவாக தவிசாளராக NEW STAR SC அணித் தலைவர் MSM.சியாத் மற்றும் அமைப்பாளராக FOWZY SC செயலாளர் M.A.நபான் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
இச்சங்கத்தின் உத்தியோகபூர்வ 2வது வருடாந்த பொதுக்கூட்டம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டபடி எதிர்வரும் 2021.06.13 ம் திகதி நாட்டின் Covid - 19 நிலைமையைக் கருத்திற் கொண்டு ZOOM வீடியோ தொழிநுட்பத்தினூடாக நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் 2021/2022 ம் ஆண்டுக்காக தெரிவுசெய்யப்பட்ட நிருவாக சபை உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளனர். அத்துடன் நிருவாக சபை உறுப்பினர்களினால் ஏனைய உப குழுக்களின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர் என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.
இவ்வேட்புமனு சிறப்பாக நிறைவு பெற உதவி நல்கிய இச்சங்கத்தின் உயிர் நாடிகளாகவுள்ள அங்கத்துவ கழகங்களின் நிருவாகிகள், அங்கத்தவர்கள் மற்றும் வீரர்களின் ஒத்துழைப்புகளுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
CAS Media
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :