பிரயாணத்தடையை மீறி செயற்பட்ட இளைஞர்களுக்கு அண்டிஜென் பரிசோதனைநூருல் ஹுதா உமர்-
பாதுகாப்பு படையினர் வீதிகளில் பரிசோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது நியாயமான காரணங்களின்றி பிரயாணத் தடையை மீறி வீதிகளில் உலாவித் திருந்த இளைஞர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமுகமாக பாதுகாப்பு படையினரால் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட்ட இளைஞர்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பெறுபேற்று முடிவில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படாமையை அடுத்து கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இனிவரும் காலங்களில் சுகாதார விதிமுறைகளை மீறுவதனுடாக பாதுகாப்பு படையினரால் நடவடிக்கை எடுக்கப்படுபவர்களுக்கு எதிராக பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதுடன் சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :