மு.கா தேசிய அமைப்பாளர் ஐக்கிய தேசிய கட்சியில் இணைவு?ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ராஜாப்தீன், ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
இதற்கமைய, ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். பிரபல தொழிலதிபரான இவர், கடந்த 2008ஆம் தொடக்கம் 2010ஆம் ஆண்டு வரை கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக கடந்த 10 வருடங்களிற்கு மேல் இவர் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆட்சிக் காலத்தின் போது நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவராகவும் பணியாற்றினார்.
இந்த நிலையில், 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமையினாலேயே ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் சபீக் ராஜப்தீன், தனது நெருங்கிய ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

நன்றி விடியல் 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :