தெஹிவ‌ளையில் பிறை தென்பட்டது.- முபாறக் அப்துல் மஜீத்தெஹிவ‌ளையில் இர‌ண்டு ஹாபிழ்க‌ள் பிறை க‌ண்ட‌தை இன்னொருவ‌ர் மிக‌த்தெளிவாக‌ உறுதிப்ப‌டுத்தியுள்ள‌ன‌ர்.
அவ‌ர்க‌ளின் உறுதிப்ப‌டுத்த‌லுக்கு இண‌ங்க‌ அவ‌ர்க‌ளை பின் ப‌ற்றி தொழும் ஒருவ‌ர் இது ப‌ற்றி பிறைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

அவ‌ர‌து அறிவிப்பை ம‌றுக்க‌ முடியாத‌ பிறைக்குழு நீங்க‌ள் எம‌து குழுவில் இல்லை என‌ சின்ன‌த்த‌ன‌மான‌ கார‌ண‌த்தை சொல்லி ம‌றுத்துள்ள‌ன‌ர்.

தெஹிவ‌லைக்கும் கொழும்பு பிறைக்குழுவுக்கும் இடைப்ப‌ட்ட‌ தூர‌ம் என்ப‌து வாக‌ன‌த்தில் சுமார் 45 நிமிடம்தான். பிறைக்குழுவோ ம‌ற்றோரோ நேர‌டியாக‌ சென்று அவ‌ர்க‌ளை விசாரித்திருக்க‌லாம். ஆனால் விசாரிக்க‌வுமில்லை, ஏற்க‌வுமில்லை. கார‌ண‌ம் இவ‌ர்க‌ள் பிறை காண‌ கூடுவ‌த‌ற்கு முன்பே 14ந்திக‌தி பெருநாள் என‌ தீர்மானித்து விட்ட‌தால் த‌ம‌து பிறை பார்த்த‌ செய்தி ஏற்றுக்கொள்ள‌ப்ப‌ட‌வில்லை என‌ அவ‌ர் தெளிவாக‌ கூறுகிறார்.
இந்த‌ ல‌ட்ச‌ண‌த்தில் கிழ‌க்கு மாகாண‌த்திலோ வ‌ட‌ மாகாண‌த்திலோ பிறை க‌ண்டு அறிவித்தால் ஏற்றிருப்பார்க‌ளா? நிச்ச‌ய‌ம் ஏற்க‌மாட்டார்க‌ள். பிறை தென்னை ம‌ர‌த்தின் மேலால் தெரிந்த‌தா, கீழால் தெரிந்த‌தா என‌ கிழ‌க்கான் ம‌டைய‌ன் போன்று கேள்வி கேட்பார்க‌ள், கேட்டிருக்கிறார்க‌ள்.

இந்த‌ப்பிர‌ச்சினை தொட‌ர் பிர‌ச்சினையாகும். தொலை பேசி க‌ண்டு பிடிக்கும் முன் ம‌க்க‌ளுக்கு இது பிர‌ச்சினையாக‌ இருக்க‌வில்லை. இப்போது தொழில் நுட்ப‌ வ‌ள‌ர்ச்சி அபார‌மாக‌ வள‌ர்ந்து விட்ட‌தால் தொட‌ர்ந்தும் ம‌க்க‌ளை ஏமாற்ற‌ முடியாது.
இப்பிர‌ச்சினையிலிருந்து விடு ப‌ட‌ ஒரே வ‌ழி பிறை க‌ண்டு பிடியுங்க‌ள் பிறை க‌ண்டு விடுங்க‌ள் என்று உல‌க‌ளாவிய‌ முஸ்லிம்க‌ளுக்கு இட்ட‌ க‌ட்ட‌ளையை ஏற்று நூறு வீத‌ம் உறுதிப்ப‌டுத்த‌க்கூடிய‌ ம‌க்காவின் பிறை அறிவிப்பை ந‌ம‌து நாட்டு முஸ்லிம்க‌ளும் ஏற்க‌ முன்வ‌ர‌வேண்டும்.
சுமார் 10 வ‌ருட‌ங்க‌ளுக்கு மேலாக‌ நாம் இத‌னைக்க‌டைப்பிடித்து எந்த‌ ச‌ந்தேக‌மோ, குழ‌ப்ப‌ங்க‌ளோ இன்றி நோன்பை பிடிக்கிறோம், விடுகிறோம்.

அதே போல் ந‌ம‌து மாத‌ பிறைக்க‌ல‌ண்ட‌ர்க‌ளையும் ம‌க்காவின் உம்முல் குரா க‌ல‌ண்ட‌ரின் ப‌டி ந‌டை முறைப்ப‌டுத்தும் ப‌டி கூறுகின்றோம். என்று  உல‌மா க‌ட்சியின் தலைவர்  முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :