லிந்துலை வைத்தியசாலையிலும் கொரோனா பிரிவு ஏற்படுத்த நடவடிக்கை.க.கிஷாந்தன்-
லவாக்கலை நகரசபைக்குட்பட்ட பகுதியில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கையினை கருத்தில் கொண்டு தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் ஆலோசனைக்கமைய முன் எச்சரிக்கையாக லிந்துலை வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சை பிரிவு ஒன்றினை ஏற்படுத்த நடவடிக்கைகளை நகர சபை தலைவர் லெச்சுமனன் பாரதிதாசன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

தொடர்ந்து வைத்தியசாலையில் கடினமாக தீர்க்கப்பட வேண்டிய குறைபாடுகள் தொடர்பாக லிந்துலை வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் எஸ்.பி.ஜயலத் தலைமையில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றன.

இதன் போது அவசரமாக தீர்க்க வேண்டிய பிரச்சினைகளை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானும், ஆளுநர் மற்றும் நகர சபையின் உதவியுடன் உடன் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை உன்னெடுக்கப் போவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

குறித்த வைத்தியசாலையில் உள்ள 05, 06 வாட்டுக்கள் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றவுள்ளதாகவும் இத்தொகுதி மற்றுமொரு பிரிவுக்கு மாற்றப்படவுள்ளன. இந்த நிலையத்திற்கு தேவையான சமையலறை, பாதை, கட்டில்கள், வாகன தரிப்பிடங்கள் உள்ளிட்ட அத்தியவசிய பணிகள் இதன் போது விருத்தி செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தலவாக்கலை பகுதியில் கடந்த காலங்களில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதன் காரணமாக சென்கூம்ஸ் மேல் பிரிவு, கீழ்பிரிவு தேயிலை ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த கலந்துரையாடலில் நகரசபையின் தவிசாளர், உப தவிசாளர் உட்பட உறுப்பினர்கள் வைத்தியசாலை நிர்வாகத்தினர் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :