கொரோனா தொற்று பரவலை தடுக்க கொட்டகலை நகரில் பொலிஸார் கடும் எச்சரிக்கை



க.கிஷாந்தன்-
டந்த சில தினங்களாக மலையகத்தின் பிரதான நகரங்களை அண்டிய பகுதியில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் காணப்பட்டதன் காரணமாக பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் திம்புள்ள பத்தனை பொலிஸார் கொட்டகலை நகரில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் முகமாக கடைகளில் கொரோனா இன்னும் ஒழியவில்லை முகக்கவசம் முறையாக அணிய வேண்டும் சமூக இடைவெளி பேண வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதிய ஸ்டிக்கர்கள் கடையாக சென்று தெளிவுப்படுத்தி வருகின்றனர்.

இதன்போது கடையில் முறையாக முகக்கவசம் அணியாது இருந்தவர்கள், சமூக இடைவெளி பேணாது இருந்தவர்கள், கடையில் சுகாதார பொறிமுறைக்கு அமைவாக தொற்று நீக்கி மற்றும் பதிவேடுகள் பேணப்படாத கடைகள் உரிமையாளர்கள் மற்றும் பணிபுரிபவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர்.

எதிர்வரும் நாட்களில் சுகாதார பொறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காதவர்கள் அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் இதுதான் இறுதி அறிவித்தல் எனவும் பொலிஸார் கடை உரிமையாளர்களை கடுமையாக எச்சரித்தனர்..

இதேவேளை வாகனங்களில் சமூக இடைவெளி இல்லாது பயணித்தவர்களையும் கடுமையாக எச்சரித்து இறக்கிவிடப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :