கொரோனாவை விரட்ட குஜராத்தில் பிரபலமாகும் மாட்டுச் சாண குளியல்!ஒலுவில். எம்.ஜே.எம் பாரிஸ்-

ந்தியாவில் கொரோனா பரவல் மோசமடைந்துள்ள நிலையில், வட இந்தியாவின் கிராமப் புறங்களிலும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் இரண்டு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மனித உயிரிழப்பு மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியிலான பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது கொரோனா.

இந்நிலையில் குஜராத்தில் மாட்டு சாணத்தில் குளித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்ற செய்தி பரவி வருகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பலரும் மாட்டுச் சாணம் குளியல் எடுத்து வருகின்றனர். மாட்டுச் சாணம், மாட்டுச் சிறுநீர் கலந்த கலவையை உடலில் பூசிக்கொண்டு, யோகா செய்தபின் மாட்டுப்பால் மற்றும் மோர் ஆகியவற்றால் உடலை சுத்தம் செய்கின்றனர்.
இந்து மதத்தில் மாடு என்பது புனிதமான அடையாளமாக பார்க்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக வீடுகளை சுத்தம் செய்வதற்கும், வழிபாட்டு சடங்குகளுக்காகவும் மாட்டு சாணத்தைப் பயன்படுத்துகின்றனர். அதில் சிகிச்சைக்கான பண்பும், ஆன்டிசெப்டிக் ( Antiseptic ) திறன் உள்ளது என்றும் நம்புகின்றனர்.

இந்நிலையில் குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் உள்ள சுவாமிநாராயண் குருகுலத்தில் மாட்டு சாணத்துடன், பசுவின் சிறுநீரையும் கலந்து உடம்பில் பூசிக்கொண்டு சிகிச்சை எடுக்கின்றனர். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும், கொரோனா அண்டாது என்கின்றனர்.
கொரோனா தடுப்பூசிக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள உலகில் தலைசிறந்த நிறுவனமான சைடஸ் கேடில்லா (Zydus Cadila) நிறுவன தலைமையகத்துக்கு அருகே இந்த குருகுலம் அமைந்துள்ளது. இங்கு இப்படி குளியல் எடுத்துக் கொள்பவர்களில் சிலர் மருந்து நிறுவனங்களில் வேலை செய்பவர்களாகவும், சிலர் வைத்தியர்களாகவும் உள்ளனர் என்பதுதான் பெரும் அதிர்ச்சியே. மாட்டுச் சாணம், மாட்டுச் சிறுநீர் கலந்த கலவையை பூசிக்கொண்டு சிறிது நேரம் இருந்துவிட்டு, பால் அல்லது மோரால் கழுவிக்கொண்டு செல்வதாக கூறுகின்றனர். இதன் மூலம் அவர்கள் நோயாளிகளை பயமின்றி அணுக முடியுமென்றும், இதன் மூலம் கொரோனா வைரஸ் தங்களை தாக்காதென்றும் இவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்

ஆனால் இது போன்ற செயல்களை இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர். தவறான பாதுகாப்பு உணர்வுக்கு வழிவகுக்கும் மற்றும் சுகாதார பிரச்சினைகளை சிக்கலாக்கும் என்கின்றனர். கூட்டமாக கூடி இது போன்றவற்றை செய்யும் போது வைரஸ்கள் பரவுவதற்கு இது வாய்ப்பாகும் என்கின்றனர்.

வைத்தியர்கள் கூட இங்கே சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள். அவர்கள் தாராளமாக வெளியில் சென்று இது ஆபத்தானது இல்லை எனக் கூறலாம். ஆனால் இதுபோன்று குளிப்பதால் கொரோனாவை விரட்டும் என எவ்விதத்திலும் விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்கிறார்கள் . இதனால் விலங்குகளிடமிருந்து வேறு ஏதேனும் தொற்றுகளே ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :