தம்பிலுவில் கண்ணகை அம்மனாலய குளிர்த்தி சடங்கிற்கு நிபந்தனையுடன் அனுமதி! திருக்கோவில் சுகாதாரவைத்திய அதிகாரி டாக்டர் .பி.மோகனகாந்தன்வி.ரி.சகாதேவராஜா-
ரலாற்றுப்பிரசித்திபெற்ற தம்பிலுவில் கண்ணகை அம்பாள் ஆலய வருடாந்த திருக்குளிர்த்திச்சடங்கு வைபவத்திற்கு கொரோனா சுகாதார நடைமுறை விதிகளுக்கமைவாக நிபந்தனையுடனான அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக திருக்கோவில் பிரதேச சுகாதாரவைத்தியஅதிகாரி வைத்தியகலாநிதி டாக்டர் பரநிருபசிங்கம் மோகனகாந்தன் தெரிவித்தார்.
கடந்த சிலதினங்களாக அங்கு இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையையடுத்து ஆலய சடங்கு தொடர்பாக அவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆலய நிருவாகத்தினருடன் நடாத்திய சந்திப்பையடுத்து இத்தகைய முடிவு எடுக்கப்பட்டதாகவும் வெள்ளிமுதல் வழமையான சடங்கு நிகழ்வுகள் தொடருமெனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலைகாரணமாக கோவிட் தடுப்பு பிரிவன் ஆலோசனைகளுக்கு அமைய பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது இதற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறு ஆலய நிருவாகமும் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
பொதுமக்கள் யாரும் ஆலயத்தின் ஆலயத்தினுள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
பக்தர்கள் உரிய ஆச்சாரங்களையும் சமய நடைமுறைகளையும் வழமை போல பேணி அவர்களது வீட்டிலிருந்தவாறே இக் கொடிய நோயிலிருந்து அனைவரும் விடுபட அன்னையினை பிரார்த்திக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
இம்முறை ஆலயத்தினுள் எந்த நேர்த்திக் கடன்இ பூஜை பொருட்களே ஆலய நிர்வாகத்தினரினால் ஏற்றுக்கொள்ளப்டமாட்டாது.
இந்த நாட்களில் அங்கப் பிரதற்சனை எடுத்தல்இ கற்புர சட்டி எடுத்தல் என்பனவற்றிற்கு அனுமதி புரணமாக மறுக்கப்பட்டுள்ளது.
ஆலய வளாகம் மற்றும் அதனை சூழவுள்ள சூழலிலும் கடைகள் வைத்தல்இ ஒன்று கூடுதல்இ யாசகம் பெறுதல் என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே இச் செயற்பாடுகளை மீறும் வகையில் நடந்து கொள்ளாமல் தவிர்க்குமாறும் மேலும் மீறி செயற்படுவோருக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுநோய்கள் தொடர்பான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கொரோனா வைரஸ் தாக்கம் உள்ள இந்த காலப்பகுதியில் கோவில் வழிபாடு மற்றும் இந்துமத கிரியைகளை செய்யும் போதும் சுகாதார நடைமுறைகளை முற்றாக பின்பற்றி நடந்து கொள்வோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :