இலங்கை வெளிநாட்டு சேவை தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2020 (2021)லங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 09.04.2021 ஆம் திகதிய வர்த்தமானி, இல: 2/223 இல் பிரசுரிக்கப்பட்ட, இலங்கை வெளிநாட்டுச் சேவை தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2020 (2021)’ அறிவித்தலின் பகுதி ꠰: பிரிவு (꠰꠰அ) விளம்பரப்படுத்தல்” இலுள்ள பின்வரும் திருத்தங்களை அரசாங்க சேவை ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது என்பதை வெளிநாட்டமைச்சு அறிவிக்க விரும்புகிறது.

வெளிநாட்டு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

திருத்தம்

மேற்படி அறிவித்தலின் பிரிவு 8 (꠰꠰꠰) இல் குறிப்பிட்ட மேற்குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய இறுதித் திகதி, 04.06.2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த அறிவித்தலின் பிரிவு 04 இல் குறிப்பிடப்பட்ட அதிகபட்ச வயதெல்லையானது, மூல வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டவாறு, விண்ணப்பங்களுக்கான முடிவுத் திகதியாக முன்னர் (உ.ம்: 10.05.2021) இருந்தவாறே அமையும்.

இந்த இறுதித் திகதி நீடிப்பு பற்றிய வர்த்தமானி அறிவிப்பினை http://documents.gov.lk/files/gz/2021/5/2021-05-21(I-IIA)E.pdf இல் காணலாம். (இணைய இணைப்பு)

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :