இன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல!-உயர்தர மாணவர்களுக்கான செய்தியில் மனோ கணேசன்ன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல. இன்று இது, உங்களுக்கு முன்னமே பிறந்தவர்களால், நிறைய வளர்த்து விடப்பட்டிருக்கின்றது. பலநூறு, ஆயிரம் புத்தம் புதிய வழிகளை, சந்தர்ப்பங்களை இன்று உலகம் உங்களுக்கு தினந்தோறும் வாரி வழங்குகிறது. ஆகவே சந்தோஷத்தையும், கவலையையும் ஒருசேர ஓரிரு நாட்களில், ஓரமாக வைத்து விட்டு, அடுத்த கட்டத்தை நோக்கி, காரியத்தில் கண்ணாக நகருங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.
உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் தொடர்பில் கருத்து கூறிய மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
உயர்தரப் பரீட்சை எழுதி அதில் பலன் பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துகள். முயற்சிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

பெறுபேறு என்பது ஒரு புள்ளிவிபரம். அது எதுவானாலும், அதைக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகருங்கள். வானம் பரந்து, விரிந்து, திறந்திருக்கின்றது.
இன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல. இன்று இது, உங்களுக்கு முன்னமே பிறந்தவர்களால், நிறைய வளர்த்து விடப்பட்டிருக்கின்றது. பலநூறு, ஆயிரம் புத்தம் புதிய வழிகளை, சந்தர்ப்பங்களை இன்று உலகம் உங்களுக்கு தினந்தோறும் வாரி வழங்குகிறது.
அந்த வகையில் நீங்கள், உங்களுக்கு முன்னர் பிறந்தவர்களை விட அதிஷ்டசாலிகள். ஆகவே, சந்தோஷத்தையும், கவலையையும் ஒருசேர ஓரிரு நாட்களில், ஓரமாக வைத்து விட்டு, அடுத்த கட்டத்தை நோக்கி, காரியத்தில் கண்ணாக நகருங்கள்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :