அக்கரைப்பற்றில் வீதி மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது..!



மாளிகைக்காடு நிருபர்-
ள்ளூராட்சி அபிவிருத்தி வலுவூட்டும் திட்டத்தின் கீழ் மக்களின் நீண்டகால கோரிக்கையின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட அக்கரைப்பற்று காதர் ஓடாவியார் வீதி சனிக்கிழமை (17) நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்த அக்கரைப்பற்று முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகியினால் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.

அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் ஏ.சீ.பதுறுதீன் மற்றும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் என்.எம். நஜிமுதீன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொண்ட அக்கரைப்பற்று மாநகர சபை ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி குறித்த வீதியின் பெயர்ப்பலகையினை திரை நீக்கம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர்கள், சபை உத்தியோகத்தர்கள், உலமாக்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், பொதுமக்கள் என மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :