ஆசிரியர் இடமாற்றம் மே-17 ஆம் திகதியே அமுலாகும்;மாகாண கல்விப் பணிப்பாளர் நிசாம் தகவல்



அஸ்லம் எஸ்.மௌலானா-
கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் யாவும் எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் என மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிசாம் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

தற்போது புனித றமழான் நோன்புக்காக முஸ்லிம் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தமிழ் பாடசாலைகள் இம்மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகிறன. இந்நிலையில் தமிழ் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள், முஸ்லிம் பாடசாலைகளில் விடுமுறை காலத்தில் கடமையேற்க முடியாத சூழ்நிலை காணப்படுகிறது.

மேலும், முஸ்லிம் பாடசாலைகளில் இருந்து தமிழ் பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவோர், முஸ்லிம் பாடசாலைகளில் தற்போது அனுபவிக்கின்ற புனித நோன்பு கால விடுமுறையை அனுபவிக்க முடியாமல் போய்விடும்.

எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு இரு வகைப் பாடசாலைகளுக்கும் பொதுவாக மே மாதம் 17 ஆம் திகதி தொடக்கம் இந்த ஆசிரியர் இடமாற்றங்களை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது- என்றார்.

இவ்விடமாற்றங்கள் இம்மாதம் 19 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என மாகாண கல்வி அமைச்சினால் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :